“2.0வில் 3.0”.. என்ன அக்ஷய் இப்டி பண்ணீட்டீங்க.. ஷங்கருக்கு இது தெரியுமா?
2.0 படத்தில் வரும் 3.0 மினிபோட்ஸ் குறித்த வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
Recommended Video

சென்னை: ரஜினியின் 2.0 படத்தில் வரும் குட்டி சிட்டியின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்.
ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் பிரமாண்ட படைப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசானது ரஜினியின் 2.0. இப்படத்தில் ரஜினி, வசீகரன், சிட்டி மற்றும் குட்டி சிட்டி என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில், வசீகரன் மற்றும் சிட்டியைவிட அதிகம் மக்களைக் கவர்ந்தது குட்டி சிட்டி தான். அதிலும் மினிபோட்ஸ் என்ற பெயரில் படத்தில் குட்டி சிட்டி செய்யும் அலப்பறைகளுக்கு நிறைய குழந்தைகள் விசிறிகள் ஆகிவிட்டனர்.
அக்ஷய் குமார் டிவீட்
இந்நிலையில், இப்படத்தின் வில்லனான அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சிட்டி, ஈவிள் க்ரோவுடன் குட்டி சிட்டியும் உள்ளது. சுமார் 12 நொடிகள் ஓடுவதாக இந்த வீடியோ இருக்கிறது.

குட்டி சிட்டி மினி போட்
கூடவே, '2.0வில் வரும் 3.0' இந்த வாரக்கடைசியில் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற படம் என தெரிவித்துள்ளார். இதனை பலரும் ஆர்வமுடன் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.

மினிபோட்ஸ் சர்ப்ரைஸ்
2.0 படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ்சே 3.0 கேரக்டரில் மினிபோட்சாக ரஜினி வருவதுதான். பட ரிலீசுக்கு முன்பு வரை இப்படத்தில் ரஜினி இரண்டு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதாக கூறப்பட்டது. இந்த குட்டி சிட்டி கேரக்டரை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.

புகைப்படம் கூட வரவில்லை
படம் ரிலீசான பிறகும் இந்த குட்டி சிட்டியின் புகைப்படம் ரிலீசாகவில்லை. இதனால் விமர்சனங்களை படித்தவர்கள் பெரிய திரையில் மினிபோட்ஸை பார்க்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் அக்ஷய் குமார் இப்படி வெளிப்படையாக குட்டி சிட்டியின் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுவிட்டார்.

தெரிந்து தான் வெளியிட்டிருப்பார்
நிச்சயம் இந்த விஷயம் ஷங்கருக்கோ, படக்குழுவினருக்கோ தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அனுமதியோடு தான் அக்ஷய் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











