கோட் படத்தில் குட்டி ஜீவனாக நடித்தது யாரு தெரியுமா?.. சினேகா கூட வெளிநாட்டில் செம ஷாப்பிங் வீடியோ!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி 3 நாட்களில் 300 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாள் வசூலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அறிவிக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியான நேற்று விடுமுறை என்பதால் மிகப்பெரிய வசூல் வேட்டை வந்திருக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக அதன் கலெக்ஷன் ரிப்போர்ட்டை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் படத்தில் குட்டி ஜீவனாக நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் படத்துக்காக வெளிநாட்டுக்கு சென்ற காட்சிகளையும், நடிகை சினேகாவுடன் ஷாப்பிங் செய்த காட்சிகளையும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளார்.
ஆழியாவோட தம்பி: கோட் படத்தில் விஜய் மற்றும் சினேகாவுக்கு மகனாக நடித்த அகிலன் எனும் குழந்தை நட்சத்திரம் வேறு யாருமில்லை ரவுடி பேபி எனும் யூடியூப் சேனல் மூலம் டிரெண்டாகி வரும் குழந்தை நட்சத்திரம் ஆழியாவோட தம்பி தான். ஆழியாவின் அலப்பறை வீடியோக்கள் யூடியூப் சேனலில் டிரெண்டாகி வரும் நிலையில், இரு குழந்தைகளுமே சினிமாவில் தொடர்ந்து நடித்து கலக்கி வருகின்றனர்.

குட்டி ஜீவன்: விஜய் மற்றும் சினேகாவுக்கு மகனாக குட்டி ஜீவன் கதாபாத்திரத்தில் நடித்தது குழந்தை நட்சத்திரம் அகிலன் தான். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் படத்தில் நடிப்பதற்காக விஜய் அங்கிள் உள்ளிட்ட டீமுடன் வெளிநாட்டுக்குச் செல்லப் போகிறேன் எனக் கூறும் வீடியோவை சற்றுமுன் அவர் ஷேர் செய்துள்ளார்.

சினேகாவுடன் ஷாப்பிங்: அம்மாவாக நடித்த நடிகை சினேகாவுடன் ஷாப்பிங் செய்த வீடியோ ஒன்றையும் குழந்தை நட்சத்திரம் அகிலன் வெளியிட்டுள்ளார். விஜய் மற்றும் சினேகா உள்ளிட்டோருடன் கோட் படத்தில் நடித்தது ரொம்பவே சந்தோஷம் என்றும் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பால் வடியும் சேட்டைக் குழந்தையாக இருக்கும் இந்த ஜீவன் தான் க்ளோனிங் விஜய்யை உருவாக்கி அப்பா காந்தியையே போட்டுத் தள்ளப் பார்க்கும் ஓஜி விஜய்யாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
வெப்சீரிஸ்: யோகி பாபு, வாணி போஜன் நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப்சீரிஸிலும் சமீபத்தில் அகிலன் நடித்திருந்தார். தனது அக்கா ஆலியாவுடன் நடித்த யூடியூப் வீடியோக்களால் பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications











