Lal Salaam heroine: யாரும்மா இந்த அனந்திகா சனில்குமார்?.. லால் சலாம் படத்தில் இவர் யாருக்கு ஜோடி?

சென்னை: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா மற்றும் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மத நல்லிணக்கம் முக்கிய கருவாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் அறிமுக போஸ்டர் முதல் டீசர், டிரைலர் என அனைத்திலும் ரஜினிகாந்தை முன்னிறுத்தியே புரமோஷன்கள் நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்று வரும் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தான் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Meet Ananthika Sanilkumar who starred in Aishwarya Rajinikanths Lal Salaam

ரஜினிகாந்த் சார் படத்தில் நடிப்பது சந்தோஷம்: லால் சலாம் படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழா துவங்கும் முன் நடைபெற்ற ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் ஒவ்வொருத்தராக ஏஞ்சல் போல திரும்பி நின்று அபவுட் டர்ன் அடித்து நிகழ்ச்சிக்குள் அழகாக என்ட்ரி கொடுத்த காட்சிகள் லைகா ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. மேலும், ரெட் கார்பெட் லைவ் வீடியோவை லைகா தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டது. அப்போது பேசிய நடிகர் விஷ்ணு விஷால் ஒரே படத்தில் பல பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் படத்தில் நான் ஹீரோ என்பதே பெரிய விஷயம். மேலும், ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், விக்ராந்த் உடன் பணியாற்றியது சந்தோஷத்தை கொடுத்துள்ளது என்றார்.

Meet Ananthika Sanilkumar who starred in Aishwarya Rajinikanths Lal Salaam

யாரு இந்த அனந்திகா சனில்குமார்: லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார் அனந்திகா சனில்குமார். நிகழ்ச்சிக்கு செம க்யூட்டாக கவுன் அணிந்துக் கொண்டு வந்த அவர் மீது தான் ஒட்டுமொத்த கண்களும் விழுந்தன. 2000ம் ஆண்டு பிறந்த சரியான 2கே கிட்டான அனந்திகா 2022ல் தெலுங்கில் வெளியான ராஜமுந்திரி ரோஸ்மில்க் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர், கடந்த ஆண்டு மேட் மற்றும் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விரைவில் லால் சலாம் மூலமாக சிறப்பான என்ட்ரியை கோலிவுட்டில் கொடுக்க காத்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும், இப்படியொரு படத்தில் நடிச்சதை ஒரு ட்ரீமா பார்க்கிறேன் என க்யூட்டாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X