கட்டா குஸ்தி 2 குட்டிப்பாப்பா ஸாராவோட குடும்பத்தை பார்த்திருக்கீங்களா.. 7 வயசுலயே இவ்ளோ சம்பளமா?
சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி, மீனா, ஷாலினி என பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் டாப் ஹீரோயின்களாக வலம் வந்துள்ளனர். பாளையத்தம்மன் படத்தில் நடித்த பாப்பா எல்லாம் சினிமாவே வேண்டாம் என ஐடிக்கு போன கதைகளும் பிரெண்ட்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் பெசன்ட் நகரில் ஐஸ் விற்றுக் கொண்டிருக்கும் கதைகளும் கூட உண்டு.
7 வயதே ஆன குட்டிப்பாப்பா ஸாரா தான் கட்டா குஸ்தி 2 படம் ரசிகர்களை இந்த அளவுக்கு கவர்ந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

படம் பல இடங்களில் ஸ்லோ டவுன் ஆனாலும், ஸாரா பாப்பா மதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிப்பு படத்தை எலிவேட் செய்து தூக்கி நிறுத்தி விடுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு இதுவரை சுமார் 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
மோகன்லால் உடன் நடித்துள்ளார்: ஸாரா பாப்பா ஏற்கனவே மோகன்லால் உடன் விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார் கட்டா குஸ்தி 2 படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியின் ரீல் மகளாக அசத்தலாக நடித்து கலக்கிய இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களும் உள்ளனர். பல பிக் பாஸ் பிரபலங்கள் மற்றும் சில முன்னணி நடிகைகளுக்கே 1 மில்லியன் ஃபாலோயர்கள் இல்லாத நிலையில், 7 வயதிலேயே 1.5 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக வைத்திருக்கிறார் இந்த அழகு குட்டிச் செல்லம்.
தனுஷ் உடன் 2 படங்கள்: தமிழில் தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரீஸ் வெப்சீரிஸ் மூலம் ஸாரா பாப்பா அறிமுகமானார். தனுஷின் மாறன் படத்தில் நடித்த ஸாரா மீண்டும் தனுஷ் உடன் நானே வருவேன் படத்திலும் நடித்துள்ளார். அட்லி தயாரிப்பில் விஜய்யின் தெறி ரீமேக்காக இந்தியில் வெளியான பேபி ஜான் படத்திலும் இவர் தான் தெறி பேபி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார் ஸாரா பாப்பா.

ஸாரா பாப்பாவோட குடும்பம்: புகைப்படக் கலைஞர் பிரவீன் மற்றும் ப்ளாகர் ஷாந்துவின் மகள் தான் ஸாரா பாப்பா. ஸாராவின் அப்பா, அம்மா என்றே அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு ஸாராவின் வளர்ச்சி உயர்ந்துள்ளது. பிரவீன் - ஷாந்து தம்பதியினருக்கு ஸாராவுடன் சேர்த்து இன்னொரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
7 வயதில் இத்தனை லட்சம் சம்பளமா?: அட்லி தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி நடிப்பில் வெளியான பேபி ஜான் படத்தில் ஸாராவுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்டா குஸ்தி 2 படத்துக்கும் அதே அளவுக்கு சம்பளம் வாங்கியிருப்பார் என்று கூறுகின்றனர். 7 வயதில் படங்களின் மூலமும், விளம்பரங்கள் மற்றும் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியா மூலம் எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறார் ஸாரா என்கின்றனர். தெறி இந்தி ரீமேக் மற்றும் கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட 2 படங்களிலும் அவருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாபாத்திரமும் காட்சிகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications