twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த க்யூட்டான டெடி வாய்ஸ்க்கு சொந்தக்காரங்க யாரு தெரியுமா? டோராவுக்கும் அவங்க குரல் தான்!

    |

    சென்னை: ஊர் முழுக்க அனைத்து குழந்தைகளும் டெடி படத்திற்கு அடிமையாகி உள்ளன.

    டெடி கரடி பொம்மையாக நடித்தது கோகுல் எனும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதை இயக்குநர் அறிவித்த நிலையில், பலரும் டெடி பொம்மைக்கு க்யூட்டான வாய்ஸ் கொடுத்தது யார் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

    பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் டோராவுக்கு குரல் கொடுத்து வரும் அதே டப்பிங் கலைஞர் தான் டெடிக்கும் குரல் கொடுத்துள்ளார்.

    ஆர்யாவின் டெடி

    ஆர்யாவின் டெடி

    இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி, சதிஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள படம் டெடி. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள இந்த படம் குழந்தைகளின் ஃபேவரைட்டாக மாறி உள்ளது. டெடிக்கு தனியாக ரைம்ஸ் எல்லாம் வைத்து இசையமைப்பாளர் இமான் அசத்தியுள்ளார்.

    டெடி பைத்தியம்

    டெடி பைத்தியம்

    குழந்தைகள் முதல் முரட்டு சிங்கிள்கள் வரை டெடி பொம்மைகளுடன் போட்டோக்களாக பொட்டு டெடி பைத்தியமாக மாறி வருகின்றனர். ஏகப்பட்ட குழந்தைகளின் அன்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ளதே விமர்சனங்களை தாண்டிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. டெடி படம் குறித்து ரசிகர்கள் பதிவிடும் அத்தனை ட்வீட்களுக்கும் நடிகர் ஆர்யா லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்.

    டெடி ரகசியம்

    டெடி ரகசியம்

    சென்னையை சேர்ந்த சிஜி டீம் தான் டெடி படத்திற்கு இப்படியொரு அற்புதமான வேலையை செய்துள்ளனர் என பாராட்டிய சக்தி செளந்தர் ராஜன் டெடி படத்தில் டெடி பொம்மைக்குள் இருந்து நடப்பதும், ஓடுவதும் என எக்ஸ்பிரசன்களை கொடுத்தது தியேட்டர் கலைஞர் கோகுல் என்கிற ரகசியத்தை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் வெளியிட்டு இருந்தார்.

    டெடி குரலுக்கு சொந்தக்காரர்

    டெடி குரலுக்கு சொந்தக்காரர்

    டெடி பொம்மையாக நடித்தது யார் என தெரிந்த நிலையில், டெடி குரலுக்கு சொந்தக்காரர் யார் என்கிற ஆர்வம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. 21 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் நிம்மி ஹர்ஷன் தான் ஆர்யாவின் டெடிக்கு குரல் கொடுத்துள்ளார்.

    டோராவுக்கும்

    டோராவுக்கும்

    2000ம் ஆண்டு வெளியான டோராவுக்கு 5 வயதில் டப்பிங் செய்ய ஆரம்பித்த கேரளாவை சேர்ந்த நிம்மி ஹர்ஷன் 21 ஆண்டுகளாக டோராவுக்கு டப்பிங் செய்து வருகிறார். மேலும், வீர் தி ரோபோ, லிட்டில் சிங்கம் உள்ளிட்ட ஏகப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் செய்து வருகிறார் நிம்மி ஹர்ஷன். டெடி படத்திற்காக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தான் டப்பிங் செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிம்மி ஹர்ஷன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Meet Nimmi Harshan, a popular dubbing artist behind Teddy voice. She also gave her voice for popular cartoon character Dora too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X