இப்படியும் படத்தை ப்ரொமோட் பண்ணலாம் பாஸ்: இது 'வேலைக்காரன்' பார்த்த வேலை
சென்னை: வேலைக்காரன் படக்குழு முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்டு தனித் தனி வீடியோ வெளியிட்டுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் நாளை ரிலீஸாகிறது.

படத்தை மோகன்ராஜா, சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில் நன்றாக விளம்பரம் செய்துள்ளனர். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களை தெரிவிக்கும் வீடியோக்களை வேலைக்காரன் குழு வெளியிட்டுள்ளது.
ஃபஹத் ஃபாசில் ஆதியாகவும், நயன்தாரா ம்ருணாளினியாகவும், பிரகாஷ் ராஜ் காசியாகவும், சினேகா கஸ்தூரியாகவும், விஜய் வசந்த் பாக்யாவாகவும் நடிக்கிறார்கள்.
நம்ம சிவா அறிவு என்ற கதாபாத்திரத்தில் வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications