டிமான்ட்டி காலனி 3.. மெயின் வில்லனே இவர் தானாம்.. லைபரியனா மிரட்டப்போறது யாருன்னு பாருங்க!
சென்னை: அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து அதன் 3வது பாகத்தையும் ரெடி பண்ணிவிட்டார். வரும் சம்மருக்கு வெளியாகவுள்ள அந்த படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை ரிவீல் செய்யும் வீடியோவை இப்போதே வெளியிட்டு வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
2015ம் ஆண்டு அருள்நிதியை வைத்து டிமான்ட்டி காலனி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் அஜய் ஞானமுத்து. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கன்னா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார்.

அந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், 2022ம் ஆண்டு சியான் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கினார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்திக்க மீண்டும் டிமான்ட்டி காலனி சீரிஸ் பக்கமே திரும்பி விட்டார்.

மெயின் வில்லனே இவர்தான்: டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் இருந்தே அந்த அட்ரஸுக்கு ஆட்களை அனுப்பி வைத்து சாகடிப்பதே ஒரு லைப்ரரியன் தான் என்கிற பில்டப்புடன் இந்த 3வது பாகம் உருவாகி உள்ளது. யாரு அந்த லைப்ரரியன் என்பதையும் இப்போதே ரிவீல் செய்து படத்தை புரமோட் செய்து வருகின்றனர். ஆரண்ய காண்டம், ஜோக்கர், மின்னல் முரளி, குடும்பஸ்த்தன், பாட்டில் ராதா, மை லார்ட் உள்ளிட்ட பல படங்களில் அட்டகாசமாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய குரு சோமசுந்தரம் தான் 24 பட ஆத்ரேயா போல டிமான்ட்டி 3 படத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.
மிரட்டும் மேக்கிங் வீடியோ: அஜய் ஞானமுத்து படங்களின் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்குப் போட்டிப் போடும் அளவுக்கு அட்டகாசமாக இருக்கும். டிமான்ட்டி காலனி 3 படத்தின் மெயின் வில்லனான லைப்ரரியனை மேக் பண்ண வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகின்றனர். வரும் சம்மருக்கு ரசிகர்களை கண்டிப்பாக தியேட்டரில் திகிலூட்ட காத்திருக்கிறது டிமான்ட்டி காலனி 3. இதற்கு மேல் அடுத்த அடுத்த பாகங்கள் வருமா? அல்லது இதுதான் இறுதி பாகமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











