ரொம்ப பாடுபட்டிருப்பாரோ: பப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தன் வாயாடி மனைவி கஜோலை கிண்டல் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகை கஜோலுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சிகம் சிங்கப்பூரில் மெழுகு சிலை வைத்துள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கஜோல் தனது மகள் நியாசாவுடன் கலந்து கொண்டார்.
தாயும், மகளும் கருப்பு நிற உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்தனர்.
கஜோல்
கஜோல் முதல் முறையாக தனது மகளுடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அஜய்
கஜோல் என்றாலே இடைவிடாமல் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அமைதியான கஜோல் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு மனைவியை கலாய்த்துள்ளார் அஜய் தேவ்கன்.
புகைப்படம்
தன்னுடைய மெழுகுச் சிலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு எப்பொழுதுமே கஜோலின் ரசிகை என்று தெரிவித்துள்ளார் கஜோல்.

தனுஷ்
பாலிவுட்டில் பிரபலமான கஜோல் பல ஆண்டுகள் கழித்து தனுஷின் விஐபி 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். இனி அடுத்ததாக எப்பொழுது கோலிவுட் பக்கம் வருவாரோ?


Click it and Unblock the Notifications











