பிரபு, சத்யராஜ், சரத்குமார்
நாளை நடிகர் விஜயகாந்த் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது.
விஜயகாந்த்தின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. எனவே புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக நாளை (ஞாயிறு) காலை தேர்தல் தேதியை முடிவு செய்ய பொதுக்குழுகூட்டம் கூடுகிறது.
இக் கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படுகிறது.
விஜயகாந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என பலர் விரும்புகிறார்கள். ஆனால் விஜயகாந்த் அரசியலில்தீவிரமாகிவிட்டார். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாலும் அதற்காகல் அவர் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபட உள்ளதாலும் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது.
நடிகர் சங்கத்தில் மொத்தம் 4,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 2,000 பேருக்கு மட்டுமேஓட்டுரிமை இருக்கிறது.
புதிய தலைவராக பிரபு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பதவியைப் பிடிக்க விஜயகுமார்,சரத்குமாரும் ஆசையோடு காத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இவர்களது அரசியல் சார்பு சங்கத்துக்கு நல்லதல்ல என்று கருதுபவர்கள், நாசர், சத்யராஜ் ஆகியோரைபோட்டியிடச் சொல்லி நெருக்கி வருகின்றனர்.
இதனால் பொதுக் குழுக் கூட்டம் மிக பரபரப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications