வெற்றிக் கூட்டணியில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன்... படத்தில் இணைந்த சிம்பு நாயகி!

சென்னை : விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி இணைந்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன்.

வித்தியாசமான தலைப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

கோவா, டையு பகுதிகளில் நடந்துவந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்ற சரத்குமார் சமீபத்தில் தனது சூட்டிங்கை முடித்துள்ளார்.

 நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் வருகிறார். அவரது சமீபத்திய படமான கோடியில் ஒருவன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்கத்திலும் கவனம்

இயக்கத்திலும் கவனம்

அடுத்ததாக அக்னி சிறகுகள் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் ஆன்டனி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 மழை பிடிக்காத மனிதன் படம்

மழை பிடிக்காத மனிதன் படம்

இதையடுத்து நடிகர் விஜய் ஆன்டனி - விஜய் மில்டன் கூட்டணியில் உருவாகிவரும் படம் மழை பிடிக்காத மனிதன். இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, டையு பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார்

முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார்

சமீபத்தில் விஜய் ஆன்டனி -சரத்குமார் காம்பினேஷனில் அவரது சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை வெளியிட்டு படக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார். தொடர்ந்து படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேகா ஆகாஷ் நாயகி

மேகா ஆகாஷ் நாயகி

படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாகியுள்ளார் சிம்பு பட நாயகி மேகா ஆகாஷ். சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் இணைந்த மேகா ஆகாஷ் தற்போது மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாகியுள்ளார். இவர் தற்போது சூட்டிங்கில் இணைந்துள்ளார்.

 உறுதி செய்த விஜய் ஆன்டனி

உறுதி செய்த விஜய் ஆன்டனி

இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. நடிகர் விஜய் ஆன்டனியும் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் மற்றும் விஜய் ஆன்டணி கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X