முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தமிழகமெங்கும் நயன்தாராவுக்கு கட்அவுட், பேனர்கள்!

By Shankar

அறம் படத்தில் நயன்தாராதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. கத்தி சர்ச்சை புகழ் கோபி நயினார் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

மக்கள் பிரச்சினைக்காக ஒரு ஆட்சியாளரே முன்னின்று போராடும் கதை கொண்ட இந்தப் படத்துக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான விளம்பரம் இந்தப் படத்துக்கு செய்யப்படுகிறது.

Mega banners for Nayanthara equel to top heroes for Aram

முக்கிய நகரங்களில் படம் வெளியாகும் அரங்குகளுக்கு முன், நகரங்களின் மையப் பகுதிகளில் நயன்தாராவின் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

விஜய், அஜித் படங்களுக்கு இணையான முக்கியத்துவம் இந்தப் படத்துக்கும் நயன்தாராவுக்கும் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநரிடம் பேசியபோது, "மற்ற யாருடனும் ஒப்பிட வேண்டாம். நயன்தாராதான் இந்தப் படத்தின் மையப் பொருள். அவரது நடிப்பு படத்துக்கு தனி மரியாதையைப் பெற்றுத் தரும். அதனால்தான் இந்தப் படத்துக்காக இவ்வளவு விளம்பரங்கள். நயன்தாரா இதற்கு முற்றிலும் பொருத்தமானவர்," என்றார்.

250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழகத்தில் வெளியாகிறது அறம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X