ராம்சரணின் RC15 படத்தின் டைட்டில் இதுவா? அனைத்து மொழியிலும் ஒரே பெயர்!

சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து மற்றும் பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட உடன். இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கிறார்.

இதில், ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும், அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ராம் சரணின் RC15

ராம் சரணின் RC15

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா போன்ற படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளதால், அவர்கள் நடிக்கும் படங்களும் பான் இந்திய படங்களாக வெளியாகி வருகின்றன. இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார்.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

இப்படத்தில் ராம் சரண் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக வரும் ராம்சரண், நடுத்தர வயது முதல் வயதான கேரக்டர் வரை பல விதமான கெட்டப்போட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இன்னும் படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

படத்தின் தலைப்பு இதுவா?

படத்தின் தலைப்பு இதுவா?

இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்திற்கு CEO தலைமைத் தேர்தல் அதிகாரி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்திற்கு ஏற்றவாறு ஒரே பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான தலைப்பு

பொருத்தமான தலைப்பு

அரசியல், தேர்தல் முறைகேடு, ஊழல் போன்றவற்றை மையக்கருவாக கொண்டு இப்படத்தின் கதை இருப்பதால், CEO என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதால், இந்த பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X