நடிப்பில் பிசி.. கோபத்தில் மலேசியா பறந்த காதலர்.. பாதியில் நின்றது பிரபல நடிகையின் திருமணம்!

ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது.

Recommended Video

Roja Serial Nalkar Priyanka marriage dropped | Roja

சென்னை: பிரபல மெகா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் திடீரென நின்றுவிட்டது தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. அதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், சந்தானம் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதுவே அவரது முதல் தமிழ் படம்.

சில காலம் சினிமா வாய்ப்பு தேடி வந்த பிரியங்கா, ஒருகட்டத்தில் சின்னத்திரை மெகா சீரியல்களில் நடிக்க முடிவு செய்தார்.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா எனும் நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இந்நிலையில் பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது. தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலும், பிரயங்காவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தாமதமான திருமணம்

தாமதமான திருமணம்

ஆனால் தொழில் நிமித்தமாக பிரியங்கா பிஸியாக இருந்ததால், இவர்களுடைய திருமணம் தாமதமானது. இதனால் கோபமடைந்த ராகுல். மலேசியாவில் வேலை தேடி சென்றுவிட்டார். இதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

பிரியங்கா அறிவிப்பு

பிரியங்கா அறிவிப்பு

இந்நிலையில் பிரியங்கா தற்போது தனது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ராகுல் உடனான தனது திருமணம் நின்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிரியங்கா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X