ரஜினி செய்வாரா.. சிரஞ்சீவி கொடுத்த டாஸ்க்.. ஏற்கனவே ராஜமெளலி செஞ்சிட்டாரு.. மணிரத்னத்துக்கும் டேக்!
சென்னை: வீட்டு வேலைகளை செய்ய தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை முடித்த நடிகர் சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னத்துக்கு அந்த சேலஞ்சை கொடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது.
வெளியே வரமுடியாத நிலையில், வீட்டிலேயே செய்யும் படியான புதிய புதிய சவால்கள் சமூக வலைதளத்தில் தோன்றி வருகின்றன.
52 வயதிலும்.. என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா.. தெறிக்க விடும் அமலாவின் ஒர்க் அவுட்!

வீட்டு வேலைகள்
சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தங்கள், வீட்டு வேலைகளை தாங்களே செய்து, மனைவி மற்றும் அம்மாவுக்கு உதவ வேண்டும் என்ற வகையில் Be the real man என்கிற சவால் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அந்த சவாலை ஏற்கும் பிரபலங்கள், மற்ற பிரபலங்களுக்கும் அந்த சவாலை விடுப்பது தான் இதில் சுவாரஸ்யம்.

சவாலை ஏற்ற ராஜமெளலி
தெலுங்கு திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டியின் இந்த Real Man சவாலை ஏற்ற பாகுபலி இயக்குநர் ராஜமெளலி தனது வீட்டு வேலைகளை செய்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கினார். மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ராஜமெளலி இந்த சவாலை விடுத்திருந்தார்.

மாப் போட்ட ஹீரோ
இயக்குநர் ராஜமெளலி விடுத்த சவாலை ஏற்று தனது வீட்டை மாப் சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி அடுக்கி வைத்து, தோட்டத்தை எல்லாம் பெருக்கி தள்ளி தானும் ரியல் மேன் என நிரூபித்திருந்தார். பின்னர், அதே சவாலை மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு டேக் செய்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

அம்மாவுக்கு தோசை
ஜூனியர் என்.டி.ஆரின் இந்த ரியல் மேன் சேலஞ்சை ஏற்றுக் கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது வீட்டை சுத்தம் செய்து, கிச்சனில் செம சூப்பரான தோசையை ஏரில் பறக்கவிட்டப்படி ஒரு கை தேர்ந்த மாஸ்டர் செஃப் சமைப்பது போல சமைத்து தனது அம்மாவுக்கு கொடுத்து அசத்தினார்.

சூப்பர் ஸ்டாருக்கு
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு கொடுத்து, இந்த லாக் டவுன் நேரத்தில் வீட்டு வேலைகளில் ஆண்களும் பங்கேற்க வேண்டும் என்பதே இந்த சவாலின் முக்கிய நோக்கம். அதனை செய்து முடித்த நடிகர் சிரஞ்சீவி, இந்த சவாலை நடிகர் ரஜினிகாந்த் செய்ய வேண்டும் என டேக் செய்துள்ளார்.

மணிரத்னத்துக்கும்
அதோடு மட்டும் விட்டு விடாமல், இயக்குநர் மணிரத்னத்துக்கு டேக் போட்டு, நீங்களும் இந்த ரியல் மேன் சேலஞ்சை செய்ய வேண்டும் என மெகா ஸ்டார் சிரஞ்சீவி அன்பு கட்டளை போட்டுள்ளார். சிரஞ்சீவியின் இந்த சவாலை சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் செய்வார்களா? என்பதை காண கோலிவுட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











