மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரருக்கு கொரோனா.. ஆனால், பயப்படாமல் அவர் என்ன சொன்னார் தெரியுமா?
ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான பரிசோதனை பாசிட்டிவ் என்று வந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே ஹோம் குவாரண்டைன் செய்து கொண்டார் நடிகர் நாக பாபு.
ஏகப்பட்ட படங்களில் குணசித்ர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார் இவர்.

பிரபல தயாரிப்பாளர்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு, ஏகப்பட்ட படங்களில் நடித்தும், நிறைய படங்களை அஞ்சனா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்தும் பிரபலமானவர் இவர். இவருக்கு தற்போது கொரோனா தொற்று பரவி உள்ள செய்தி சகோதரர்களையும் தெலுங்கு சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிளாஸ்மா தானம்
தனக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என வந்ததும் கலங்காமல் நடிகர் நாக பாபு, அப்போ சீக்கிரமே நான், பிளாஸ்மா தானம் செய்ய தகுதியானவன் ஆகிவிடுவேன் என அதனையும் பாசிட்டிவாக மாற்றி உள்ளார். 58 வயதாகும் நாக பாபுவின் இந்த ஆச்சர்யமான அணுகுமுறையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மகள் திருமணம்
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை நிஹாரிகா இவரது மகள் தான். இந்த ஆண்டு இறுதியில் மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். நடிகர் வருண் தேஜும் நாக பாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பிரார்த்தனை
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய சினிமா குடும்பத்தை சார்ந்த பிரபலம் என்பதால், ஏகப்பட்ட தெலுங்கு சினிமா ரசிகர்கள் நடிகரும் தயாரிப்பாளருமான நாக பாபுவின் உடல் நிலை வெகு விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபலங்களும் நாக பாபு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











