Don't Miss!
- News
புரியாமல் விளையாடுகிறார்! எடப்பாடி பின் இருக்கும் அந்த "புள்ளி".. மிதுன் பழனிசாமிக்கு பறந்த வார்னிங்
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
‘வேதாளம்‘ ரீமேக்கிற்காக கெட்டப்பை மாற்றிய சிரஞ்சீவி..மனுஷன் சும்மா கெத்தா இருக்காரே?
சென்னை : அஜித் நடித்த வேதாளம் ரீமேக்கிற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மிரட்டலான கெட்டப்பில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் வேதாளம். இந்த படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது.
இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு, ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
துணிவு
கொண்டாட்டத்தின்
போது
உயிரிழந்த
அஜித்
ரசிகர்..
நேரில்
சென்று
அஞ்சலி
செலுத்திய
சரத்குமார்

வேதாளம்
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான வேதாளம் படத்தில் அஜித் முதல் பாதியில் முரட்டுத்தனமான வில்லனாகவும், இரண்டாம் பாதியில் பாசத்திற்காக ஏங்கி உருகும் அண்ணனாகவும் நடித்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அனிரூத் இசையில் 'ஆலுமா டோலுமா' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. வேதாளம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விவேகம், விஸ்வாசம் படம் வெளிவந்தன.

போலா சங்கர்
வேதாளம்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அதேபோல, அஜித்தின் தங்கையாக நடித்த லஷ்மி மேனன் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மஹதி சங்கர் இசையில் மேஹர் ரமேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

மிரட்டலான லுக்
இப்படத்தி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி ஒரு கேரக்டருக்காக மொட்டை போட்டு உள்ளார். மொட்டை தலையுடன் உள்ள சிரஞ்சீவியின் புதிய கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த லுக்கில் சிரஞ்சீவி சும்மா மிரட்டலாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

வால்டர் வீரய்யா
சிரஞ்சீவி நடிப்பில் பொங்களுக்கு வெளியான திரைப்படம் வால்டர் வீரய்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவி இளமையாகவே காணப்படுகிறார். இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், வசூலையும் ஒரு கைப்பார்த்துள்ளது.