Waltair Veerayya Twitter Review: பொங்கலுக்கு துணியாவது எடுத்து இருக்கலாம்.. 4வது படமும் போச்சா?
ஹைதராபாத்: இந்த பொங்கலுக்கு 4 மெகா ஸ்டார் நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வச்சு செஞ்சிடுச்சு என வயதானவர்களும் சொல்லும் அளவுக்கு சொதப்பி உள்ளது.
வாரிசு, துணிவு படங்களை தாண்டி தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படம் நோகடித்தது போதாது என சிரஞ்சிவி நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா படமும் வொர்க்கவுட் ஆகவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி, ஆச்சார்யா, காட் ஃபாதர் படங்களை தொடர்ந்து வால்டர் வீரய்யா படமும் படுத்தே விட்டதய்யா என விளாசி வருகின்றனர்.

வின்டேஜ் பாஸ்
வின்டேஜ் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை மீண்டும் திரையில் காட்டியதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். நேற்று பார்த்த மொக்கை படத்துடன் இந்த படம் சூப்பர் என வீர சிம்ஹா ரெட்டியை ட்ரோல் செய்து விட்டு சிரஞ்சீவி ரசிகர்கள் வால்டர் வீரய்யா படத்தை பாராட்டி வருகின்றனர்.

மெகா மாஸ் பிளாக்பஸ்டர்
வால்டர் வீரய்யா படத்தின் ட்ரெயலர் காட்சிகள் மற்றும் பூனக்காலு பாடல், ரவிதேஜா என்ட்ரி என ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ட்ரீட் தியேட்டரில் உள்ளது என்றும் மெகா மாஸ் பிளாக்பஸ்டர் என ரசிகர்கள் வால்டர் வீரய்யா படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த பொங்கல் வின்னர் சிரஞ்சீவி தான் என டோலிவுட்டில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நோ மாஸ் ஒன்லி லாஸ்
ரசிகர்களை தாண்டி படத்தை பார்த்த வெகுஜன ரசிகர்கள் அய்யோ முடியலடா சாமி என படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். நோ மாஸ்.. நோ பாஸ்.. ஒன்லி லாஸ் என்றும் ஆச்சார்யா, காட்ஃபாதர் படங்களின் வரிசையில் வால்டர் வீரய்யாவும் ஃபிளாப் என போட்டு சிரஞ்சிவி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளனர். மாஸ் காட்சிகளை மட்டும் வைத்து படம் எடுத்தால் முதல் நாள் மட்டும் தான் ஹவுஸ் ஃபுல்லாகும் என்பதை எப்போது தான் நடிகர்களும் இயக்குநர்களும் புரிந்து கொள்ளப் போறாங்களோ என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

பார்க்கவே முடியல
முதல் பாதி ரொம்பவே ஆவரேஜ், இடைவேளை காட்சி மட்டும் சூப்பர். இரண்டாம் பாதியில் ரவி தேஜா வரும் காட்சிகள் நல்லா இருந்தாலும், அடுத்தடுத்து படம் விறுவிறுப்பாக செல்லும் என்று பார்த்தால் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி விட்டது Dissappoint என பதிவிட்டு வெறும் 2 ரேட்டிங் மட்டுமே இந்த நெட்டிசன் கொடுத்துள்ளார்.

பொங்கல் ரேஸ் ஓவர்
இந்த பொங்கலுக்கு 4 பெரிய நடிகர்களின் படங்கள் வரப் போகிறது ரசிகர்களை தியேட்டருக்கு திரும்ப திரும்ப வரவைப்பார்கள் என எதிர்பார்த்த அனைவருக்கும் இப்படி ஏன் தான் தியேட்டருக்கு வந்தோம் என்கிற நிலை தான் ஏற்பட்டுள்ளது என 4 படத்தையும் தொடர்ந்து பார்த்த நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். இதுக்கு பொங்கலுக்கு புது டிரெஸ்ஸே 4 எடுத்து இருக்கலாம் என்று கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











