70 வயதிலும் மாறாத எளிமை.. சக நடிகர்களுடன் தரையில் அமர்ந்த மம்மூட்டி.. டிரெண்டாகும் வீடியோ!

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மம்மூட்டி சக நடிகர்களுடன் தரையில் அமர்ந்து க்ரூப் போட்டோ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி இந்த வயதிலும் தனது எளிமையை தவறாமல் கடைபிடித்து வருகிறார்.

மகன் துல்கர் சல்மான் ஹீரோவான பின்னரும், ஆண்டுக்கு அரை டஜன் படங்களில் நடித்து தான் இன்னமும் சிங்கமாகவே இருக்கிறேன் என்பதை நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

50 ஆண்டுகள்

50 ஆண்டுகள்

1971ம் ஆண்டு அனுபவங்கள் பலிச்சகல் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான மம்மூட்டி மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் நடிகரக 50 ஆண்டுகள் கோலோச்சி வருகிறார். மலையாள திரையுலகில் பல தேசிய விருதுகளை வென்ற இவர் கணிசமாக தமிழ் படங்களிலும் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்து மிரட்டி இருப்பார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராமின் பேரன்பு என பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதே எனர்ஜி

அதே எனர்ஜி

70களில் ஆரம்பித்த திரைப் பயணம் இன்னும் அதே எனர்ஜியுடன் பணியாற்றி வருகிறார் மம்மூட்டி. இந்த ஆண்டு இதுவரை மம்மூட்டி நடிப்பில் 4 படங்கள் வெளியாகி விட்டன. பீஷ்ம பர்வம், புழு, சிபிஐ 5 தி பிரைன் என மம்மூட்டி ஹீரோவாக 3 படங்களும் பிரியன் ஒட்டதில்லனு படத்தில் கேமியோவாகவும் வந்துள்ளார். மேலும், ரம்யா பாண்டியன் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ச்ஷா உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கின்றன.

70 வயதிலும் எளிமை

70 வயதிலும் எளிமை

பொதுவாகவே படங்களிலும், சினிமா விழாக்களிலும் சாதாரணமாக வேட்டி, சட்டையுடன் மிகவும் எளிமையாகத்தான் மம்மூட்டி வந்து செல்வார். சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர்களின் 'அம்மா' அமைப்பின் பொதுக்குழு மீட்டிங்கில் கலந்து கொண்ட மம்மூட்டி கட்டம் போட்ட சட்டை மற்றும் வேட்டியுடன் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட தீர்மானங்களும் சமீபத்தில் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் விஜய் பாபு உள்ளிட்டவர்களுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தரையில் அமர்ந்து

தரையில் அமர்ந்து

அதுமட்டுமின்றி சக நடிகர்களுடன் சேர்ந்து பிரம்மாண்டமான க்ரூப் போட்டோ எடுக்கப்பட்ட நிலையில், நடிகர் மம்மூட்டி சாதாரணமாக தரையில் நடிகர்களுடன் அமர்ந்து கொண்டு க்ரூப் போட்டோ எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது. மனிதம் மற்றும் எளிமையை இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கமலுடன் இணைந்து

கமலுடன் இணைந்து

மாலிக் படத்தை இயக்கிய இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அடுத்ததாக கமல் படம் பண்ணப் போவது உறுதியாகி உள்ள நிலையில், அந்த படத்தில் மம்மூட்டி நடிக்கப் போவதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. பான் இந்தியா படங்களில் மல்டி ஸ்டார் நடிகர்கள் கான்செப்ட் பரவி வரும் நிலையில், விக்ரம் படத்தை போல இன்னொரு வெற்றியை பெற இப்படியொரு காம்பினேஷன் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X