நாகார்ஜுனாவுக்கு நாக்கு ருசிக்க சமைச்சிப் போட்ட சிரஞ்சீவி.. பிளேட்டை பார்த்து ஜொள்ளும் ரசிகர்கள்!
ஹைதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவியின் லேட்டஸ்ட் போட்டோ செம வைரலாகி வருகிறது.
நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி உள்ள வைல்டு டாக் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
அந்த டென்ஷனை மறக்கடிக்கும் விதமாக இப்படியொரு விருந்தை சிரஞ்சீவி கொடுத்துள்ளார் என ட்வீட் போட்டு பலரையும் வெறுப்பேற்றி வருகிறார் நாகார்ஜுனா.

டாப் ஹீரோக்கள்
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், நாகார்ஜுனாவும் ரசிகர்களை ஏகப்பட்ட திரைப்படங்கள் மூலம் மகிழ்வித்து வருகின்றனர். இருவரது வாரிசுகளும் நடிக்க வந்த பிறகும் தற்போதும் புதிய படங்களில் ஹீரோவாக நடித்து இருவரும் அசத்தி வருகின்றனர்.

பிசினஸ் பார்ட்னர்கள்
தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்களான இருவரும் நீண்ட கால நண்பர்கள் மட்டுமின்றி பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மா டிவியில் இருவரும் பார்ட்னர்களாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைல்டு டாக்
இயக்குநர் அஹிஷோர் சாலமன் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி உள்ள வைல்டு டாக் படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார். இன்று அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சயாமி கெர், தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நாக்கு ருசிக்க
வைல்ட் டாக் திரைப்படத்தின் வெளியிட்டை முன்னிட்டு நாகார்ஜுனாவின் டென்ஷனை குறைக்க நடிகர் சிரஞ்சீவி சமைத்த நான்வெஜ் உணவு பிளேட்டை கையில் வைத்தபடி போஸ் கொடுத்து டோலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும் வெறுப்பேற்றி உள்ளார் நாகார்ஜுனா. தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











