இன்று திருமணம்.. பிரபல நடிகைக்கு ரூ.1.5 கோடி பரிசு பொருட்களை வழங்கிய மெகா ஸ்டார்!

By

சென்னை: பிரபல நடிகைக்கு இன்று மாலை திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு மெகா ஸ்டார், பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், நடிகை நிஹரிகா கோனிடேலா.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர்.

ஹேப்பி வெட்டிங்

ஹேப்பி வெட்டிங்

நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தம்பி, நாகபாவுவின் மகள். இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று கூறுகின்றனர். தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நெருங்கிய உறவினர்கள்

நெருங்கிய உறவினர்கள்

நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.

நெருங்கிய தோழிகள்

நெருங்கிய தோழிகள்

திருமணம் இன்று மாலை 7.15 மணிக்கு நடக்கிறது. உதய்பூரில் உள்ள ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் நடக்கும் திருமணத்துக்காக, மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர். நிஹரிகாவின் நெருங்கிய தோழிகளான சில நடிகைகளும் சென்றுள்ளனர்.

பெல்லி குத்துரு

பெல்லி குத்துரு

திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரர் வருண் தேஜ் கவனித்து வருகிறார். திருமணத்துக்கு முந்தைய, மணமகளை திருமணத்துக்குத் தயார்படுத்தும் Pellikuthuru விழாவில், தனது அம்மாவின் நிச்சயதார்த்த புடவையை அணிந்து நிஹரிகா கலந்துகொண்டார்.

1.50 கோடி பரிசு

1.50 கோடி பரிசு

அப்போது நிஹரிகாவின் பெரியப்பாவும் நடிகருமான சிரஞ்சீவி, அவருக்கு ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். பெரியப்பா என்றாலும் சிரஞ்சீவியை அவர் அப்பா என்றுதான் அழைப்பாராம். அந்தப் பாசத்துக்காகவே அவர் விலை மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மணமகனுக்கும் காஸ்ட்லி பரிசு பொருட்களை கொடுக்க இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X