வேதாளம் ரீமேக்.. அஜித்துக்கே டஃப் கொடுப்பாரா சிரஞ்சீவி.. போலா ஷங்கர் டிரைலர் எப்போது ரிலீஸ்!
சென்னை: மெகா சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலா ஷங்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் வேதாளம். இந்த படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியானது.
இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு, ராகுல் தேவ், தம்பி ராமையா என பலர் நடித்திருந்தனர்.
வேதாளம்: அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அஜித் முதல் பாதியில் கெட்டவனாகவும், இரண்டாம் பாதியில் தங்கையின் பாசத்திற்காக ஏங்கும் அண்ணனாகவும் நடித்திருந்தார். அஜித்தின் அசால்டான நடிப்பில் இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அனிரூத் இசையில் ஆலுமா டோலுமா சோஷியல் மீடியாவில் டிரெண்டடித்தது.

சிரஞ்சீவி போலா சங்கர்: வேதாளம் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனநிலையில், இப்படம் தெலுங்கில் போலா சங்கர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அஜித்தின் தங்கையாக நடித்த லஷ்மி மேனன் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மஹதி சங்கர் இசையில் மேஹர் ரமேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
மாஸ் கெட்டப்: இந்த படத்தில் முரட்டுத்தனமாக வில்லனாகவும், பாசமிகு அண்ணன் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இதில், சிரஞ்சீவி ஒரு கேரக்டருக்காக மொட்டை போட்டு உள்ளார். மொட்டை தலையுடன் உள்ள சிரஞ்சீவியின் புகைப்படம் சமூக வலைதளங்கள் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
டிரைலர்: இந்நிலையில், போலா ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளநிலையில், இப்படத்தின் டிரைலர் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் மெகா ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications