”கெட் வெல் சூன் சூர்யா “ தனது ‘தளபதி’யை மறக்காத மம்மூட்டி.. ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்து!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என மலையாள திரையுலகின் மெகாஸ்டார் மம்மூட்டி வாழ்த்தி உள்ளார்.

Recommended Video

Rajini uncle குணமடைய வேண்டும், கஷ்டமா இருக்கு | Filmibeat Tamil

அண்ணாத்த படப்பிடிப்பில் சில ஊழியர்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்த நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ரஜினி குணமடைய பிரார்த்தனை

ரஜினி குணமடைய பிரார்த்தனை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பல தலைவர்களும், பிரபலங்களும் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பவன் கல்யாண் பிரார்த்தனை

பவன் கல்யாண் பிரார்த்தனை

ஹைதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங்கில் இருந்த நிலையில், ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டோலிவுட் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்தும், அவர் சீக்கிரமே குணமடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

கெட் வெல் சூன் சூர்யா

இந்நிலையில், தற்போது மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி "கெட் வெல் சூன் சூர்யா - அன்புடன் தேவா" என பதிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்தி உள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அந்த நினைவுகளை மம்மூட்டி அசைப்போட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் எப்போ

டிஸ்சார்ஜ் எப்போ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. நாளை காலை ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதை முடிவு செய்வார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பவுள்ளார் ரஜினிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X