மேகா ஆகாஷ் நடித்த காமெடி ஆக்சன் கலந்த சாட்டிலைட் சங்கர் - ட்ரெய்லர் ரிலீஸ்

மும்பை: நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகாத நிலையில், அடுத்ததாக நடித்த பேட்ட, பூமராங் ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில் மேகா ஆகாஷ் நடித்த இந்திப்படமான சாட்டிலைட் சங்கர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது ஒரு ராணுவ வீரரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

தமிழில் தனுஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் ரெடியாக மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. ஆனால் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாயகன் இவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.

Megha Akash Acted Satellite Shankar Movie Trailer Released

எத்தனையோ முறை படம் வெளியாகும் தேதி பற்றிய செய்திதான் வருகிறதே தவிர, படம் வெளியாவதற்கான வழியை காணோம். இதற்கு, இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன், தான் தயாரிக்கவிருக்கும் படங்களுக்கு வாங்கிய பணத்தைக்கொண்டு, தான் இயக்கவிருக்கும் படங்களுக்கு செலவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பிறகு, மேகா ஆகாஷ் நடித்த பேட்ட, பூமராங் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் வெளியாகியது. அதற்கு பிறகு மேகா ஆகாஷ் இந்தியில் சேட்டிலைட் சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது .இந்த படத்தை தயாரித்து வருகின்றனர் சினி ஒன் ஸ்டூடியோ முரட் கேதானி மற்றும் அஸ்வின் வர்தே. இந்த படத்தின் கதாநாயகன் சூரஜ் பஞ்சோலி. இவர் இதற்கு முன் ஹீரோ என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்கி வருகிறார் இர்பான் கமல். இவர் இந்தி நடிகராவார்.

தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. படத்தில் ஒரு மிலிட்டரி வீரரை மையமாய் கொண்டு காமெடி, சாகசம், ஆக்சன் என்று படம் உருவாகி உள்ளது. இர்பான் கமல் இந்த படத்தை தெலுங்கு பட சாயலில் உருவாக்கி இருக்கிறார். அது உங்களுக்கு முன்னோட்டம் பார்த்தாலே தெரியும். மற்றும் மேகா ஆகாஷ் வரும் காட்சிகள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது என்று பல இளைஞர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X