பிரபல ஹீரோ சல்மான் கானிடம் அதைச் சொன்ன அடுத்த நாளே.. நம்பவே முடியலை.. தனுஷ் ஹீரோயின் நெகிழ்ச்சி!
சென்னை: பிரபல இந்தி ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார் நடிகை மேகா ஆகாஷ்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ்.
தெலுங்கில் லை என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டா
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் இவர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால், மேகாவும் பேசப்பட்டார். அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் அவர் ஜோடியாக நடித்துள்ளார். வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கி உள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

சல்மான் கான்
இந்தியில் சூரஜ் பஞ்சோலி ஜோடியாக, 'சேட்டிலைட் சங்கர்' என்ற படத்தில் நடித்த மேகா ஆகாஷ், இப்போது மீண்டும் ஒரு இந்தி படத்தில் சத்தம் போடாமல் நடித்து வருகிறார். 'தபாங் 3' படத்துக்குப் பிறகு, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம், ராதே. திஷா பதானி, ரன்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராப், தமிழ் ஹீரோ பரத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

சுவாரஸ்ய கேரக்டர்
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து கொண்டிருக்கும்போதுதான், லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் தானும் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார், நடிகை மேகா ஆகாஷ். அவர் கூறும்போது, இந்தப் படத்தில் நான் சல்மான் கான் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால், முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். சுவாரஸ்யமான கேரக்டர். சல்மான் கான் மிகச் சிறந்த மனிதர்.

சிறந்த அனுபவம்
ஒவ்வொரு சின்ன நிகழ்வையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறார். ஒரு முறை அவரது பீயிங் ஹியூமன் அமைப்பைப் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் பீயிங் ஹியூமன் டி சர்ட்கள் சிலவற்றை எனக்குக் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்தப்படம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது' என்கிறார் மேகா ஆகாஷ்.


Click it and Unblock the Notifications











