அமலா பாலுக்கு மிஸ்ஸானது.. இப்போ மேகா ஆகாஷுக்கு கிடைச்சிருக்கு!

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விஜய்சேதுபதியை வைத்து எஸ்.பி. ஜனாநாதன் லாபம் படத்தை இயக்கி வருகிறார். அதில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

லாபம் படத்தை தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Megha Akash pair with Vijay Sethupathi in her next

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடிகை அமலாபால் நடித்திருந்தார். அந்த படம் வெளியான நிலையில், விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலா பால் வெளியேற்ற பட்ட செய்திகள் மிகப்பெரிய சர்ச்சையை கோலிவுட்டில் உருவாக்கியது.

தற்போது, அந்த படத்திற்கு யாவரும் கேளிர் என தலைப்பிடப்பட்டுள்ளது. யாவரும் கேளிர் தலைப்பை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தான் வைத்துள்ளார். மேலும், அந்த படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படம் பல சிக்கல்களை கடந்து ஒருவழியாக இம்மாத இறுதியில் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் படங்களுக்கு பின்னர், பாலிவுட் சென்ற மேகா ஆகாஷ், எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விஜய்சேதுபதியின் யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் கோலிவுட் வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X