Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
'என் மகன் வடிவில் கணவர் சிருவைப் பார்க்கிறேன்..' 'தொட்டில் விழா'வில் நடிகை மேக்னா ராஜ் உருக்கம்!
பெங்களூரு: என் மகன் வடிவில், மறைந்த தனது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவை காண்கிறேன் என்று நடிகை மேக்னா ராஜ் சொன்னார்.
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (39). கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ் ஹீரோ அர்ஜூனின் மருமகன்.
சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் காதலித்து சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

திடீர் நெஞ்சுவலி
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணம், கன்னட சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்தபோது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

ஆளுயர கட் அவுட்
அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு நடந்த சீமந்த விழாவில், சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆண் குழந்தை
இந்நிலையில் அவர் நினைத்தது போலவே கடந்த 22 ஆம் தேதி, மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துள்ளதாக சமூக வலை தளங்களில் ரசிகர்கள் கூறினர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கும் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

செல்ல சிண்டு
குழந்தை பிறக்கும் முன்பே சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும், நடிகருமான துருவ் சர்ஜா ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி தொட்டில் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். குழந்தைக்கு சிண்டு என செல்லப்பெயர் வைத்திருப்பதாக மேக்னா ராஜின் தந்தை சுந்தர் ராஜ் கூறியிருந்தார். பெயர் சூட்டுவிழா பிரமாண்டமாக நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

தொட்டில் விழா
இந்நிலையில், குழந்தையை தொட்டிலில் போடும் விழா மேக்னாராஜ் வீட்டில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்டனர். விழாவுக்குப் பின் மேக்னா ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'என் மகன் வடிவில், மறைந்த என் கணவரை பார்க்கிறேன். சிரு இறந்த பின்பு துன்பத்தில் இருந்த என்னை, என் மகன் மீட்டுள்ளான்.

தாங்க முடியாது
எனது மகன் மூலம் சிருவை காண்பேன் என நினைக்கவில்லை. என் வேதனைகளை என் மகனுடைய முகம் மறக்கச் செய்கிறது. நான் தைரியமானவள் என்று பலரும் கூறுகிறார்கள். அப்படியல்ல. என்னால் வேதனைகளைத் தாங்க முடியாது. கடினமானச் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை சிருவிடம் இருந்துதான் கற்றேன்' என்றார்.

காதல் சொல்ல
நடிகை மேக்னா ராஜ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் சுந்தர் ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.