காதலர் தினத்தில் ஜூனியர் சிரஞ்சீவி சார்ஜா போட்டோ.. நடிகை மேக்னா ராஜ் அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி!
சென்னை: காதலர் தினத்தன்று தனது மகனின் புகைப்படத்தை வெளியிடப்போவதாக நடிகை மேக்னா ராஜ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜா. இவர், நடிகர் அர்ஜூனின் சகோதரி மகன்.
சிரஞ்சீவி சார்ஜாவும் நடிகை மேக்னா ராஜும் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காதல் சொல்ல
மேக்னா ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்தார். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக, நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்தார்.

4 மாத கர்ப்பிணி
இது கன்னட திரைத்துறை மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது நடிகை மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.
Recommended Video

ஆண்குழந்தை
நடிகை மேக்னா ராஜூக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தைப் பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறினர்.
பெயர் சூட்டு விழா
விரைவில் பெயர் சூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று கூறியிருந்தார், மேக்னா ராஜின் அப்பா சுந்தர் ராஜ். குழந்தையை வீட்டில் சின்டு என்று அழைத்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே மேக்னா ராஜ் வீட்டில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.


Click it and Unblock the Notifications











