twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நினைத்தது போலவே மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தை.. ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித்தொட்டில்.. அசத்திய துருவா!

    By
    |

    பெங்களூரு: நடிகை மேக்னா ராஜுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவா சார்ஜா, அந்த குழந்தைக்கு வெள்ளித் தொட்டில் பரிசளித்துள்ளார்.

    தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ்,

    இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

    சிரஞ்சீவி சார்ஜா

    சிரஞ்சீவி சார்ஜா

    இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மாரடைப்பால் மரணம்

    மாரடைப்பால் மரணம்

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவருடைய மரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது அவர் மனைவி மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று உருக்கமாக கூறியிருந்தார்.

    கட் அவுட் அருகில்

    கட் அவுட் அருகில்

    இந்நிலையில் நடிகை மேக்னா ராஜூக்கு சில நாட்களுக்கு முன் சீமந்தம் நடந்தது. இதில் கொரோனா காரணமாக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மறைந்த நடிகரும் மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட், அவர் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.

    வெள்ளித் தொட்டில்

    வெள்ளித் தொட்டில்

    அந்த புகைப்படங்களை மேக்னா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியும் நடிகருமான துருவ் சார்ஜா, ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித் தொட்டிலை நேற்று பரிசளித்தார்.

    அழகான ஆண் குழந்தை

    அழகான ஆண் குழந்தை

    இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் மேக்னாராஜூக்கு இன்று அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. மேக்னா எதிர்பார்த்தது போலவே, சிரஞ்சீவி சார்ஜாவே வந்து பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Meghana Raj and Chiru's baby gets Rs 10 lakh silver crib from Dhruva Sarja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X