பிரமாண்டமாக நடக்கிறது பெயர் சூட்டு விழா.. நடிகை மேக்னா ராஜ் குழந்தைக்கு இதுதான் செல்ல பெயர்!
பெங்களூரு: நடிகை மேக்னா ராஜின் குழந்தைக்கு குடும்பத்தினர் செல்லப் பெயர் ஒன்றை சூட்டி அழைத்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை மேக்னா ராஜ், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

திடீர் நெஞ்சுவலி
இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள். இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பயங்கர சோகம்
அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.

அழகான ஆண்குழந்தை
அவர் நினைத்தது போலவே கடந்த 22 ஆம் தேதி, மேக்னாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறினர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கும் குழந்தைக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

பெயர் சூட்டு விழா
நடிகை மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நஸ்ரியா, தனது கணவர் பகத் பாசிலுடன் நேரில் சென்று அவரையும் அவர் குழந்தையையும் சில நாட்களுக்கு முன் வாழ்த்தினார். இந்நிலையில், குழந்தையின் பெயர் சூட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது.

செல்லப் பெயர்
இதற்கிடையே, குழந்தைக்கு செல்லப் பெயர் வைத்து அழைத்து வருவதாக, மேக்னாவின் தந்தை சுந்தர் ராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'என் மருமகன் சிரஞ்சீவி சார்ஜாவே குழந்தையாக எங்கள் வீட்டுக்கு வந்ததுபோல இருக்கிறது. குழந்தை சிரஞ்சீவி சார்ஜா போலவே இருக்கிறார். குழந்தையை சிண்டு என்ற செல்லப் பெயரால் அழைத்து வருகிறோம்.

மறக்கச் செய்பவன்
எங்கள் கவலைகளை மறக்கச் செய்பவன் என்பதால் இந்தப் பெயரால் அழைத்து வருகிறோம். பெயர் சூட்டுவிழா பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். அப்போது பெயரை அறிவிப்போம். தைரியமான என் மகளை நினைத்தும் இந்த நேரத்தில் பெருமைபடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











