போதைப்பொருள் விவகாரத்தில் என் கணவர் பெயரை இழுப்பதா? இயக்குனர் மன்னிப்பு கேட்க மேக்னா ராஜ் கோரிக்கை!

By

பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் தேவையில்லாமல் தனது கணவரின் பெயரை இழுத்ததற்காக இயக்குனர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்திரஜித் லங்கேஷ்

இந்திரஜித் லங்கேஷ்

கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

நடிகை ராகிணி திவிவேதி

நடிகை ராகிணி திவிவேதி

இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தோழி நடிகை ராகிணி திவிவேதியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்திருந்த இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரஞ்சீவி சார்ஜா குறித்த தனது பேச்சை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

நடிகை மேக்னா ராஜ்

நடிகை மேக்னா ராஜ்

இந்நிலையில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ், இந்திரஜித் லங்கேஷ், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் மேக்னா, இதுபற்றி கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடுமையான மனவலி

கடுமையான மனவலி

'கடந்த சில நாட்களாக தேவையில்லாமல், மறைந்த என் கணவர் சிரஞ்சீவி சார்ஜா பெயர் அடிபடுகிறது. இதனால் கடுமையான மனவலியை அடைந்தேன். அவர் பெயரை பயன்படுத்தியதற்காக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதை கர்நாடகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் உறுதிப்படுத்தி உள்ளார்.

தயாராக இருக்கிறேன்

தயாராக இருக்கிறேன்

இந்நிலையில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கூறும்போது, நான் ஏற்கனவே என் வார்த்தையை திரும்ப பெற்றுவிட்டேன். நான் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறவில்லை. இருந்தும் மேக்னா ராஜ் மற்றும் அவர் குடும்பத்தினர் இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X