Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எங்களின் காதல் சின்னம்.. முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்!
சென்னை: காதலர் தினமான இன்று தனது மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார் நடிகை மேக்னா ராஜ்.
நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவை நடிகை மேக்னா ராஜ் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஓடிடி தளத்தை நாடும் படங்கள்...யாருக்கு லாபம் விநியோகஸ்தருக்கா...தயாரிப்பாளருக்கா
கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தது மேக்னா ராஜுக்கு பேரிழப்பாக அமைந்தது.
மரணம்

கணவர் மரணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக மேக்னா ராஜின் கணவரும் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்து தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

வயிற்றில் குழந்தை
இது கன்னட திரைத்துறை மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது நடிகை மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.

சொன்னது போலவே
நடிகை மேக்னா ராஜூக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேக்னா ராஜுக்கு அவர் சொன்னதை போலவே ஆண்குழந்தைப் பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஜூனியர் சி
காதலர் தினமான இன்று சமூக வலைதளத்தில் முதன் முறையாக தனது ஆண் குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை மேக்னா ராஜ். குழந்தைக்கு விரைவிலேயே பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது. குழந்தையை சின்ட்டு என்றும் ஜூனியர் சி என்றும் அழைத்து வருகின்றனர்.

குவிகிறது வாழ்த்து
குழந்தை அப்படியே சிரஞ்சீவி சார்ஜா போலவே இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து, அழகுச் செல்லம் என வாழ்த்தி வருகின்றனர். உங்கள் கணவர் இல்லாத குறையை நிச்சயம் இந்த குழந்தை போக்குவான் என்றும் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி நடிப்பில் உருவாகியுள்ள செம திமிரு படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.