அர்ஜுனின் அண்ணன் மகனை 2 முறை திருமணம் செய்த நடிகை மேக்னா ராஜ்
Recommended Video

பெங்களூர்: நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது.
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கன்னட நடிகையான மேக்னா ராஜ். உயர்திரு 420 படத்திலும் நடித்த அவர் அதன் பிறகு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் மேக்னா ராஜ் தனது காதலரை திருமணம் செய்துள்ளார்.

சிரஞ்சீவி
மேக்னா ராஜ் தனது காதலரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை மே 2ம் தேதி பெங்களூரில் திருமணம் செய்து கொண்டார். நடிகர் அர்ஜுனின் அண்ணன் மகன் தான் இந்த சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முறை
மேக்னா, சிரஞ்சீவிக்கு இரண்டு முறை திருமணம் நடந்தது. ஏப்ரல் 30ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், மே 2ம் தேதி இந்து முறைப்படியும் பெங்களூரில் வைத்து திருமணம் நடந்தது.

வாழ்த்து
மேக்னா, சிரஞ்சீவியின் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அர்ஜுன் தனது குடும்பத்தோடு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காதல்
மேக்னாவுக்கு சிரஞ்சீவியை 10 ஆண்டுகளாக தெரியும். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications