Don't Miss!
- Finance
ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகிழ்வோடு… சிரித்த முகத்தோடு இருப்பார்… சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து மோக்னா ராஜ் உருக்கம் !
சென்னை : மேக்னா ராஜ் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் பழைய புகைப்படத்தை வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேகனா ராஜ் கர்ப்பாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு சிண்டு என பெயர் வைத்துள்ளார்.
மோக்ன ராஜ் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்.. பொகரு பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட துருவா சர்ஜா!

மாரடைப்பால் உயிரிழந்தார்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஆண் குழந்தை பிறந்தது
சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் . சீரஞ்சீவி ராஜா இறந்த போது மேக்னா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அனைவரும் கண்கலங்கினர்
தனது கணவரின் நினைவாக அடிக்கடி இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு கண்ணீர் விட்டு அழுது வருகிறார் மேக்னா. சமீபத்தில், தனது செல்ல மகன், அப்பா சிரஞ்சீவியின் புகைப்படத்தை தொட்டுப்பார்த்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

சோகத்தை விரும்பியது இல்லை
தற்போது மேக்னா, தனது கணவரின் பழைய புகைப்படத்தை வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், சிரஞ்சீவி சர்ஜாவை அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனே பார்த்திருக்கிறார்கள். சிரஞ்சீவிக்கு சோகமே பிடிக்காது. நாடகம் மற்றும் திரைப்படங்களில் கூட அழுவதையும் அவர் விரும்பியது இல்லை. அவர் ஒருபோதும் தனது உணர்ச்சிபூர்வமான பக்கத்தை மற்றவர்களிடம் காட்டயது இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.