Meghana Raj: நம்ம குழந்தை முதன்முறையா ஸ்கூலுக்கு போறான்.. அவனை ஆசிர்வதியுங்க.. மேக்னா ராஜ் உருக்கம்!

பெங்களூரு: கணவனை இழந்து தனது மகனுடன் வாழ்ந்து வரும் நடிகை மேக்னா ராஜ் தனது மகன் முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் நிகழ்வை உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் 2010ல் கோலிவுட்டில் அறிமுகமானார்.

உயர்திரு 420 மற்றும் நந்தா நந்திதா என சில தமிழ் படங்களில் நடித்த இவர், கன்னடம் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

Meghana Rajs son Raayan goes to school for the 1st time and her mom shares pics

காதல் திருமணம்: கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா உடன் சில படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை மேக்னா ராஜ் கடந்த 2018ம் ஆண்டு அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கோலாகலமாக நடைபெற்ற திருமண வாழ்க்கை 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. திடீர் மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கணவரை இழந்து தவிக்கும் மேக்னா: காதல் கணவரை சில ஆண்டுகளிலேயே இழந்த நடிகை மேக்னா ராஜ் சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

Meghana Rajs son Raayan goes to school for the 1st time and her mom shares pics

குழந்தையை பார்க்க வேண்டும் என ரொம்பவே ஆசையாக இருந்த சிரு இப்படி சீக்கிரமே தன்னையும் தனது குழந்தையையும் விட்டுப் பிரிந்து விட்டாரே என உடைந்தே போய்விட்டார் மேக்னா ராஜ்.

பள்ளிக்குச் செல்லும் மகன்: தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்து அன்புடன் வளர்த்து வரும் மேக்னா ராஜ் தற்போது தனது குழந்தை முதன்முறையாக பள்ளிக்குச் செல்வதை முன்னிட்டு ஒரு குட்டி விழாவையே நடத்தி உள்ளார்.

அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி உள்ளார் மேக்னா ராஜ்.

Meghana Rajs son Raayan goes to school for the 1st time and her mom shares pics

இதை பார்க்க நீங்க இல்லையே: குழந்தையை காணவும் குழந்தை முதல் முறையாக கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் அழகையும் நேரில் கண்டு ரசிக்க நீங்க என் கூட இல்லையே என உருகி உள்ளார் மேக்னா ராஜ்.

மேலும், குழந்தை ராயன் நல்லா படிச்சு பெரியாளா வளரணும், எல்லாருக்குமே கல்வி என்பது மிகவும் முக்கியம். அதில், முதல் அடி எடுத்து வைக்கப் போகும் என் மகனை ஆசிர்வதியுங்க நண்பர்களே என்றும் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மேக்னா ராஜ் மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X