மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பாடல்களைப் பாடி குழந்தையைத் தாலாட்டுகிறேன்.. மேக்னா ராஜ் நெகிழ்ச்சி!

By

சென்னை: மறைந்த தனது கணவர் நடித்த பட பாடல்களை பாடி குழந்தையை தாலாட்டுவதாக நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், நடிகை மேக்னா ராஜ்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக, சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்தார்.

நீங்களே பிறப்பீர்கள்

நீங்களே பிறப்பீர்கள்

இது கன்னட திரைத்துறையில் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.

ஆண்குழந்தை

ஆண்குழந்தை

நடிகை மேக்னா ராஜூக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேக்னா ராஜுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி, அழகான ஆண்குழந்தைப் பிறந்தது.

மீண்டும் பிறப்பு

மீண்டும் பிறப்பு

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறினர். குழந்தையின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது. விரைவில் பெயர் சூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்று
கூறியிருந்தார், மேக்னா ராஜின் அப்பா சுந்தர் ராஜ். இந்நிலையில், தாய்மை பற்றி நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

சொல்லி இருக்கிறார்கள்

சொல்லி இருக்கிறார்கள்

அவர் கூறியிருப்பதாவது: இந்த பூமியில், அற்புதமான மற்றும் கடினமான விஷயம் என்னவென்றால் அது தாய்மை என்பதை உணர்ந்தேன். தாயின் அன்பு மற்றும் தியாகத்தை அனுபவிக்கும் வரை மற்றவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.

அம்மாவுக்கு சல்யூட்

அம்மாவுக்கு சல்யூட்

என் அம்மா செய்த அனைத்துக்கும் என் சல்யூட். இப்போதும் எனது மிகப்பெரிய பலம் அவர்தான். சிரு என்னிடம் அடிக்கடி நான் பீனிக்ஸ் பறவை என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை என் மகனிடம் காண்கிறேன். குழந்தையை பார்த்த அனைவரும் அவர் சிரு'வை போலவே இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒப்புக்கொள்கிறேன்.

கொண்டாட்ட மனநிலை

கொண்டாட்ட மனநிலை

அவர் எப்போதும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர். என் மகனும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குழந்தைக்கு சிறந்த தாயாக இருப்பேன். சிறந்த தந்தையாக இருப்பேனா என்பது தெரியாது. குழந்தையை பேபிமா என்று நான் அழைக்கிறேன். அப்பா, சிண்டு என அழைக்கிறார். இன்னும் நிரந்தரமான செல்லப் பெயர் வைக்கவில்லை.

Recommended Video

Meghana Raj blessed with Baby Boy • Arjun Sarja, Chiranjeeve Sarja
சிருவின் தாலாட்டு

சிருவின் தாலாட்டு

சிருவின் படப் பாடல்களையே குழந்தையை தூங்க வைக்க தாலாட்டாக பாடுகிறேன். இப்போது எனது மகனை கவனிப்பது முக்கியம். அவன் கொஞ்சம் வளர்ந்ததும் நான் சினிமாவில் மீண்டும் நடிப்பேன். ஏனென்றால் அது மட்டும்தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் தெரியும். இவ்வாறு மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X