மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவி.. ஆளுயர கட் அவுட் அருகில்.. நடிகை மேக்னா ராஜூக்கு வளைகாப்பு!

By

பெங்களூரு: நடிகை மேக்னா ராஜூக்கு சீமந்தம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Meghana Raj வளைகாப்பு புகைப்படங்கள் கண்கலங்க வைக்கிறது

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா ராஜ்,

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சோகத்தில் ஆழ்த்தியது

சோகத்தில் ஆழ்த்தியது

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்திய சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

நான்கு மாத கர்ப்பம்

நான்கு மாத கர்ப்பம்

சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது அவர் மனைவி மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், 'நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை' என்று கூறியிருந்தார்.

நெருங்கிய சொந்தங்கள்

நெருங்கிய சொந்தங்கள்

இந்நிலையில் நடிகை மேக்னா ராஜூக்கு சீமந்தம் நடந்துள்ளது. இந்த விழாவில் கொரோனா காரணமாக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவில் மறைந்த நடிகரும் மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட், அவர் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.

இரண்டு ஸ்பெஷல்

இரண்டு ஸ்பெஷல்

அந்த புகைப்படங்களை நடிகை மேக்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்கள் முகத்தில் புன்னகையை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிலர் கூறியுள்ளனர்.

உங்களுடனே இருக்கிறார்

உங்களுடனே இருக்கிறார்

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா எப்போதும் உங்களுடனேயே இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். உங்கள் குழந்தையின் மூலம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மீண்டும் வருவார் என்றும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கட் அவுட்டை அருகில் வைத்து சீமந்த விழா நடத்தி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X