மளிகை சாமான் வாங்கவே யோசனை பண்ண வேண்டி யிருக்கு.. துபாயில் வசிக்கும் ப்ரபல தமிழ் நடிகை கவலை!

By

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக, மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது என்று துபாயில் வசிக்கும் பிரபல தமிழ் நடிகை தெரிவித்துள்ளார்.

சிம்புவின், சரவணா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இந்தி நடிகை மேக்னா நாயுடு.

பிரசாந்துடன் ஜாம்பவான், சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், டி.ராஜேந்தரின் வீராசாமி, சுந்தர்.சியின் வாடா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

டென்னிஸ் வீரர்

டென்னிஸ் வீரர்

கார்த்தியின் சிறுத்தை உட்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். இவர், போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகியல் ரீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

தற்போது இருவரும் துபாயில் வசித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வெளியே வர மக்கள் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார், நடிகை மேக்னா. அவர் கூறியிருப்பதாவது: இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முழுமையான லாக்டவுன் போல்தான் இருக்கிறது.

மளிகை சாமான்கள்

மளிகை சாமான்கள்

மக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சமூக விலகலை சரியாகக் கடைபிடிக்கிறார்கள். கையுறைகளை அணிந்திருக்கிறார்கள். லாக்டவுனுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற நாம் தயங்கியதில்லை. ஆனால், இப்போது மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அதிக நேரம், வெளியே இருக்க விரும்பவில்லை.

கவலை இல்லாமல்

கவலை இல்லாமல்

வாழ்க்கை நிச்சயமற்றதாக இருப்பதால், வெளியே அலைவது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், எல்லோரும் மாஸ்க் மற்றும் குளோஸ் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இனி, இது பழக்கமாகமே மாறிவிடும். இதற்கு முன் மக்கள் எங்கும் கவலையில்லாமல் சுதந்திரமாகச் சென்று வந்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.

Recommended Video

Actress Kamna Jethmalani Recent Status | Idhaiya Thirudan, Jayam Ravi
தயாராக இருங்கள்

தயாராக இருங்கள்

எல்லோரும் பயத்துடனும் கவலையுடனும் இருக்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டோம். வெளியில் சுற்றுவது சவுகரியமானது அல்ல என்பதை உணருங்கள். இந்த கடினமான யதார்த்தத்தையும் கொரோனா வைரஸின் வலிமையையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களையும் உங்கள் அருகில் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க மனதளவில் தயாராக இருங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X