செல்லம் சின்டுவுடன்.. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய மேக்னாராஜ்.. ரசிகர்கள் வாழ்த்து

By

சென்னை: நடிகை மேக்னா ராஜும் அவர் குழந்தை சிண்டுவும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

Recommended Video

Meghana Raj blessed with Baby Boy • Arjun Sarja, Chiranjeeve Sarja

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ்,

இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சிரஞ்சீவி சார்ஜா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாரடைப்பால் உயிரிழந்தார். சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது அவர் மனைவி மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.

சீமந்தத்தில் கட்அவுட்

சீமந்தத்தில் கட்அவுட்

இந்நிலையில் நடிகை மேக்னா ராஜூக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேக்னா ராஜுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி, அழகான ஆண்குழந்தை பிறந்தது.

மீண்டும் பிறப்பு

மீண்டும் பிறப்பு

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறி வந்தனர். குழந்தையின் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த நடிகை மேக்னா ராஜ், குழந்தையுடன் நேற்று வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

பெயர் சூட்டு விழா

பெயர் சூட்டு விழா

இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினர் குழந்தையை வாழ்த்திச் செல்கின்றனர். ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர். பெயர் சூட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது. குழந்தைக்கு சிண்டு என செல்லப் பெயர் வைத்து அழைத்து வருவதாகவும் எங்கள் கவலைகளை மறக்கச் செய்பவன் என்பதால் இந்தப் பெயரால் அழைப்பதாகவும் மேக்னாவின் தந்தை சுந்தர்ராஜ் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X