எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதா? விவாகரத்து ஆன பிரபல சின்னத்திரை நடிகை மறுப்பு!
சென்னை: தனது சொந்த வாழ்க்கை பற்றி பலர் வதந்தி பரப்பி வருவதாக, பிரபல நடிகை மேக்னா வின்சென்ட் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்திருந்தவர், நடிகை மேக்னா வின்சென்ட்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார்.

பொன்மகள் வந்தாள்
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள், அவளும் நானும் தொடர்களில் நடித்தார். மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

கருத்து வேறுபாடு
இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் வெளியானபோதும் இருவரும் ஏதும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

விவாகரத்து
இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். பிறகு விவாகரத்து பெற்றனர். டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதை போல, நடிகை மேக்னாவும் பொன்மகள் வந்தாள் தொடரில் மேக்னாவுடன் நடித்த நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.

வதந்திகள் பரவுகின்றன
இந்நிலையில் தனது சொந்த வாழ்க்கை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருவதாக அவர் கூறியுள்ளார். மேக்னா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் அவர் பெற்றோர் பிரிந்து விட்டதாக ஒருவர் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னர் அந்த வீடியோவில் அவர் அம்மாவையும் தோன்ற வைத்தார். அப்பா வின்சென்ட் மற்றொரு ஊரில் வசிப்பதாகக் கூறினார்.

அமைதியாக இருந்தேன்
தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் எவ்வளவு அமைதியாக இருந்தேன் என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். கண்மூடித்தனமாக அனைவரையும் நம்பியவள் நான். நாம் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருந்தால், நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.

முடிவு செய்யவேண்டும்
வாழ்க்கையில் எதுவும் நடக்கும். தாங்கிக் கொண்டு இருக்க வேண்டுமா? முன்னேறி செல்ல வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ள நடிகை மேக்னா, தனது சொந்த வாழ்க்கை பற்றி அதிகமான வதந்திகள் வருவதாகவும் அதை புறக்கணிக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











