பந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் 'அந்த' இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ
திருவனந்தபுரம்: டிவி சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் திருமணத்திற்கு முன்பு வெளியிட்ட வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த மேக்னா வின்சென்ட். பரங்கிமலா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
இரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

டிவி சீரியல்
தெய்வம் தந்த வீடு தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். அந்த தொடரில் அவர் சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
வீடியோ
மேக்னாவுக்கும், கேரளாவை சேர்ந்த டான் டோனிக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. முன்னதாக மேக்னா டோனியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டார்.

மேக்னா
வீடியோவில் மேக்னா கால்பந்தை வேகமாக எத்த அது அவரின் ஆள் டோனியின் உடம்பில் படாத இடத்தில் படுகிறது. இந்த வீடியோவை வைத்து சேட்டன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

மெஸ்ஸி, டோணி
மேக்னா பந்தை எட்டி உதைத்ததை பார்த்து ஃபுட்பால் விளையாட மெஸ்ஸி கூப்பிடாக, டான் டோனியின் மிடில் ஸ்டம்பை குறி வைத்து அடித்ததை பார்த்து கிரிக்கெட் விளையாட டோணி கூப்பிட்டாக என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











