யோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை!

யோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்தில் நடிகை மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

Recommended Video

யோகியுடன் ஜோடி சேர்ந்த யாசிகா & மேக்னா நாயுடு- வீடியோ

சென்னை: யோகிபாபு நடிக்கும் 'தர்ம பிரபு' படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் மேக்னா நாயுடு. இதற்காக ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

யோகிபாபு நடிப்பில் இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில், பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம் இது.

Megna naidu in Yogi Babus dharma prabhu

தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.

வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Megna naidu in Yogi Babus dharma prabhu

இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

தமிழ் சினிமா தற்போதைய காமெடி நடிகர்களில் மிகவும் பிஸியாக இருப்பவர் யோகிபாபு. அவருடைய காட்டில் தற்போது அடைமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய நடிகைகள் கூட யோசிக்காமல், யோகி பாபு படம் என்றால் ஓகே சொல்லிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X