சினிமா, அரசியலில் மாஸ்டர்கள் நீடிப்பார்கள், பபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள்: ராஜூமுருகன்

சென்னை: மாஸ்டர்கள் நீடித்து நிற்பார்கள், பஃபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள். அதுபோலத் தான் மெஹந்தி சர்க்கஸ் பட இயக்குநர் சரவண ராஜேந்திரன் அண்ணனும் நீடித்து நிற்பார் எனப் பாராட்டியுள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.

அறிமுக நடிகர் ரங்கராஜ், பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு அறிமுகமாகும் ஸ்வேதா திரிபாதி, நடிகர்கள் விக்னேஷ்காந்த், மாரிமுத்து, சன்னிஜி நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் வெளியாகவிருக்கும் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் ராஜூமுருகன் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர்கள்:

இயக்குநர்கள்:

இந்த நிகழ்ச்சியில் மூத்த இயக்குநர் பாக்யராஜ், நடிகர் சிவகுமார், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, வினோத், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் செல்வா, இப்படத்துக்குக் கதை, வசனம் எழுதியுள்ள ராஜு முருகன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டது.

மெஹந்தி சர்க்கஸ் இசை வெளியீடு:

மெஹந்தி சர்க்கஸ் இசை வெளியீடு:

மெஹந்தி சர்க்கஸ் படத்தை இயக்கியுள்ள சரவண ராஜேந்திரன். பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். தேசிய விருது பெற்ற `ஜோக்கர்' படத்தின் இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரரான இவர், ‘ஜோக்கர்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

சினிமா சர்க்கஸ்:

சினிமா சர்க்கஸ்:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஜுமுருகன், "பொதுவா சினிமா, அரசியல் என்ற சர்க்கஸ்களில் மாஸ்டர்கள் பின்தங்கிவிட்டு, பபூன்கள் முன்னேறிவிடுவதுபோல நான் வந்து முதல்ல படம் பண்ணிட்டேன். எனக்கு முன்னாடியே சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்தவர் சரவணன் அண்ணன்.

நம்பிக்கை:

நம்பிக்கை:

ஆனால், மாஸ்டர்கள் நீடித்து நிற்பார்கள், பபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள். என் அண்ணனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என நம்புகிறேன்" என்றார் மகிழ்ச்சியுடன். இதேபோல் ஒவ்வொருவரும் சரவணனுடனான தங்களது இனிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதால், மெஹந்தி சர்க்கஸ் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நெகிழ்ச்சிகரமானதாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X