நோட்டா ஹீரோயினுக்கு நேரமே சரியில்லை: ஏர்போர்ட்டை அடுத்து ரயிலில் பிரச்சனை
Recommended Video

சென்னை: நோட்டா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரயிலில் பயணம் செய்தபோது அசவுகரியத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் மெஹ்ரீன் பிர்சாதா. அவர் தற்போது நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார்.
படத்தை ஆனந்த் சங்கர் இயக்க ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

ரயில்
நோட்டா படப்பிடிப்பில் கலந்து கொள்ள மெஹ்ரீன் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டி இருந்தது. விமானம் கிடைக்காததால் ரயிலில் பயணம் செய்தார்.

குடிமகன்
ரயிலில் மெஹ்ரீனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் யாரோ ஒருவர் குடிபோதையில் அமர்ந்திருந்தார். இதை பார்த்த மெஹ்ரீன் அவரை எழுந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு கூற பயந்து கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டே பயணித்தார்.

கார்
செய்வதறியாது ஆனந்த் சங்கருக்கு போன் செய்து தனது நிலைமையை விளக்கினார் மெஹ்ரீன். இதையடுத்து ஆனந்த் சங்கர் கார் அனுப்பி வைத்தார். பின்னர் மெஹ்ரீன் காரில் சென்னை வந்தார்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சாரம் செய்து சிக்கினார்கள். இந்நிலையில் அமெரிக்கா சென்ற மெஹ்ரீனிடம் விமான நிலையத்தில் வைத்து 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தை அடுத்து ரயில் பயணத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மெஹ்ரீன்.


Click it and Unblock the Notifications











