அப்படி பிரம்மாண்டமாக நிச்சயம் பண்ணிட்டு.. இப்போ திருமணம் கேன்சல்னு சொல்லிட்டாரே பட்டாஸ் ஹீரோயின்!

சென்னை: நடிகை மெஹ்ரீன் பிர்சடா நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.

டோலிவுட்டின் இளம் நடிகையான மெஹ்ரீன் பிர்சடா நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் உடன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்த நிலையில், தற்போது திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பட்டாஸ் ஹீரோயின்

பட்டாஸ் ஹீரோயின்

கிருஷ்ணா காடி வீர பிரேம கதா, ராஜா தி கிரேட், மஹானுபாவடு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து வந்த இளம் டோலிவுட் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. கடந்த 2020ல் வெளியான தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

ஜெய்ப்பூர் அரண்மனையில் தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் உடன் கடந்த மார்ச் 12ம் தேதி பிரம்மாண்டமாக நிச்சயம் செய்துக் கொண்டார் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. ராஜா ராணி போல இருவரும் ஜொலிக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வேற லெவலில் வைரலாகின.

திருமணம் ரத்து

திருமணம் ரத்து

இந்நிலையில், தற்போது திடீரென நடிகை மெஹ்ரீன் பிர்சடா தனது நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்வதாகவும் தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் உடன் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஒட்டும் இல்லை உறவும் இல்லை

ஒட்டும் இல்லை உறவும் இல்லை

இனிமேல் அந்த குடும்பத்துடன் எந்தவொரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் மெஹ்ரீன் பிர்சடா. எப்போ கல்யாண சாப்பாடு போடுவார் பட்டாஸ் நாயகி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் இந்த திடீர் அறிவிப்பு இடியாய் வந்து இறங்கி இருக்கிறது.

பிரைவேட் மேட்டர்

பிரைவேட் மேட்டர்

இப்போதைக்கு எனது திருமண விவாகரம் தொடர்பாக இதை மட்டும் தான் நான் அறிவித்துள்ளேன். வேறு எதையும் கூற விரும்பவில்லை. எனக்கென்றும் தனிப்பட்ட பிரைவசி இருக்கிறது. என்னுடைய பிரைவேட் மேட்டரை இதற்கு மேல் வெளிப்படுத்த முடியாது என்றும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

மேலும், இறுதியாக தொடர்ந்து சினிமாவில் தான் நடிக்கப் போவதாகவும், நல்ல படங்களை நோக்கி காத்திருப்பதாகவும், தனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் இந்த நேரத்திலும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்றும் நடிகை மெஹ்ரீன் பிர்சடா கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஹாப்பி

ரசிகர்கள் ஹாப்பி

இவ்வளவு இளம் வயதிலேயே எதிர் வீட்டு ஹீரோயின் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என புலம்பிய ரசிகர்கள் தற்போது நல்ல முடிவு தான் எடுத்திருக்கீங்க, இன்னும் நிறைய காலம் நல்லா நடிச்சிட்டு பொறுமையா திருமணம் செய்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X