எதிர் வீட்டு ஹீரோயினுக்கு விரைவில் திருமணம்.. வருங்கால கணவருடன் வளைத்து வளைத்து ப்ரீ வெட்டிங் ஷூட்!

சென்னை: தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சடாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் பாவ்யா பிஷ்னாயை நிச்சயம் செய்து கொண்டார்.

நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி மெஹ்ரீன் பிர்சடா, தற்போது ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

பஞ்சாப் பால்கோவா

பஞ்சாப் பால்கோவா

பஞ்சாபை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சடாவுக்கு வெறும் 25 வயது தான் ஆகுது. திரைத் துறையில் இளம் நடிகையாக கலக்கி வரும் இவர், திடீரென சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகும் அறிவிப்பை வெளியிட்டு ஏகப்பட்ட இளம் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.

அறிமுகம்

அறிமுகம்

மாடலிங் துறையில் ஏகப்பட்ட மகுடங்களை சூடி வந்த மெஹ்ரீன் பிர்சடா, கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நானியின் கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பில்லவுரி படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர், தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நோட்டா படத்திலும் நடித்தார்.

எதிர்வீட்டு ஹீரோயின்

எதிர்வீட்டு ஹீரோயின்

நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் எதிர்வீட்டு ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட நடிகர்களின் இதயங்களை கவர்ந்தார் மெஹ்ரீன் பிர்சடா. நோட்டா படத்தில் ஹீரோயினாக நடித்த போதும் தமிழ் ரசிகர்களுக்கு தனுஷ் படத்தின் மூலம் தான் நன்கு பரீட்சையமானார். மீண்டும் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில், திடீரென தனது நீண்ட நாள் காதலர் பாவ்யா பிஷ்னாய் உடன் இந்த மாத தொடக்கத்தில் நிச்சயம் செய்து கொண்டார். தனது சமூக வலைதள பக்கங்களில் தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய மெஹ்ரீன், அவருடன் நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

ப்ரீ வெட்டிங் ஷூட்

மெஹ்ரீன் பிர்சடா இன்னும் தனது திருமண தேதியை அறிவிக்கவில்லை. சீக்கிரமே திருமண வைபவம் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட ப்ரீ வெட்டிங் ஷூட் வீடியோவை தற்போது ஷேர் செய்து ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X