கல்யாணத்தை நிறுத்திட்டு இப்படி கடற்கரையில் ஜாலியா காத்து வாங்குறாரே.. சந்தோஷத்தில் பட்டாசு நடிகை!

சென்னை: நடிகை மெஹ்ரீன் பிர்சடா கடற்கரையில் செம சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

தொழிலதிபரும் அரசியல்வாதியுமான பாவ்யா பிஷ்னாய் உடன் நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டார் மெஹ்ரீன் பிர்சடா.

தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் மறைமுகமாக அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புகைப்படங்களையும் கேப்ஷன்களையும் கொடுத்து வருகிறார்.

பல கோடி செலவு செய்து

பல கோடி செலவு செய்து

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா மற்றும் பட்டாசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சடா பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து கடந்த மார்ச் மாதம் பாவ்யா பிஷ்னாய் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

நடிகை மெஹ்ரீன் பிர்சடா பதிவிடும் ட்வீட்களையும் கேப்ஷன்களையும் வைத்து பார்த்தால், நடிகை மெஹ்ரீன் பிர்சடாவுக்கும் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. திருமணத்தை நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்த மெஹ்ரீன் பிர்சடா அந்த குடும்பத்தினருடன் எந்த சம்பந்தமும் இனி கிடையாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

பிடிக்காத திருமணம்

பிடிக்காத திருமணம்

நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்னர் தான் மணமகன் குறித்தும் அவர்களது வீட்டார் குறித்தும் புரிந்து கொள்ளவே முடியும். அப்படி கருத்து மோதல்கள் ஏற்பட்டால் அந்த பிடிக்காத திருமணத்தை கட்டாயப்படுத்தி செய்து கொள்வதை விட இப்படி விலகி விடுவதே நல்லது என ரசிகர்கள் பலரும் மெஹ்ரீன் செயலை பாராட்டி வருகின்றனர்.

என்கிட்டயே கத்தி இருக்கு

என்கிட்டயே கத்தி இருக்கு

தன்னை தற்காத்துக் கொள்ள இன்னொருவரின் துணை தேவையில்லை என்றும் தன்னிடமே கத்தி இருக்கும் பெண்கள் நினைப்பார்கள் என சமீபத்தில் கேப்ஷன் போட்டு மறைமுகமாக தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்த பாவ்யா பிஷ்னாய்க்கு உணர்த்துவதை போல மெஹ்ரீன் பிர்சடா போட்ட பதிவு வைரலானது.

Recommended Video

Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries
கடற்கரையில் சுதந்திரமாக

கடற்கரையில் சுதந்திரமாக

இந்நிலையில் தற்போது கடற்கரையில் செம சுதந்திரமாக இருக்கும் புகைப்படங்களை நடிகை மெஹ்ரீன் பிர்சடா வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். கூடிய விரைவிலேயே தான் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ரசிகர்களுக்கு சந்தோஷம்

ரசிகர்களுக்கு சந்தோஷம்

இந்த இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போறீங்களா என ஏங்கிய இளைஞர்கள் பலரும் தற்போது திருமணத்தை அவர் நிறுத்திய செய்தி அறிந்து ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர். இப்போதான் நீங்க ஃப்ரீயா, ஹேப்பியா இருக்கீங்க இப்படியே இருங்க என உசுப்பேத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X