தனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்

By Siva

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார்.

தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி குற்றலாத்தில் துவங்கியது. தற்போதைக்கு தனுஷ் 34 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சினேகா நடிக்கிறார்.

Mehreen Pirzada to act in Dhanush 34

புதுப்பேட்டை படத்தை அடுத்து 13 ஆண்டுகள் கழித்து சினேகா இந்த படம் மூலம் தனுஷுடன் சேர்ந்து நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் சினேகாவும், தனுஷும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமான மெஹ்ரீன் பிர்சாதா நடிக்க உள்ளார். தனுஷ் படத்தில் மெஹ்ரீன் நடிப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நோட்டா படத்தில் மெஹ்ரீனுக்கு பெரிதாக வேலை இல்லை. படம் முழுக்க விஜய் தேவரகொண்டா தான் வந்தார். மேலும் ஹீரோயின் மெஹ்ரீனை விட வில்லியாக நடித்த சஞ்சனா பெயர் வாங்கிவிட்டார். இந்நிலையில் மெஹ்ரீனுக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ் ஒரு படத்தில் நடித்தார் என்றால் படம் பார்ப்பவர்கள் அவரின் நடிப்பை தான் பாராட்டுவார்கள். காரணம் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் தனுஷ். மாரி 2 படம் வெளியானபோது நடிப்பில் பொளந்து கட்டும் வரலட்சுமி சரத்குமாரையே யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவுக்கு தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் 34 படத்தில் மெஹ்ரீன் என்ன செய்து ரசிகர்களை கவரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கொடி படத்தில் தனுஷை வித்தியாசமாக காட்டிய துரை செந்தில் குமார் இந்த படத்திலும் ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் 34 படத்திற்கு விவேக் மற்றும் வெர்வின் இசையமைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் பட விளம்பர வேலைகளில் பிசியாக இருக்கும் தனுஷ் விரைவில் துரை செந்தில்குமார் பட ஷூட்டிங்கில் மீண்டும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X