Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் தாவுத்தின் காதலியா? மீடியாக்களை விளாசி தள்ளிய பாகிஸ்தான் நடிகை.. என்ன சொன்னார் தெரியுமா?
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் உள்ளதாக வந்த செய்தியை விளாசித் தள்ளி இருக்கிறார் பாகிஸ்தான் நடிகை மெஹ்விஷ் ஹயத்.
Recommended Video
பாலிவுட் நடிகைகளை தனது வலைக்குள் விழவைத்து, இந்தி திரைப்படத் துறையே தனது வசம் வைத்திருந்த தாவூத் இப்ராஹிம், மும்பையை விட்டு தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார்.
ஐட்டம் நம்பருக்கு ஆடிக் கொண்டிருந்த நடிகை திடீரென டாப் ஹீரோயினாக மாறிய நிலையில், தாவூத் இப்ராஹிமின் சித்து வேலை இருப்பதாக சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.
ஹேப்பி
நியூஸ்..
குட்டி
கோலியா?
குட்டி
அனுஷ்காவா..
ஒரே
குஷியில்
நட்சத்திர
தம்பதியினர்!

நிழல் உலக தாதா
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகு மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தார் தாவூத் இப்ராஹீம். பாலிவுட் முதல் கோலிவுட் வரை தாவூத் இப்ராஹிமின் இன்ஸ்பிரேஷனில் பல டான் படங்கள் ரிலீசானது குறிப்பிடத்தக்கது. மும்பையில் பல பாலிவுட் நடிகர்களுக்கு இவருடன் தொடர்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில்
தாவூத் இப்ராஹிமை வேட்டை ஆடும் பணி இந்தியாவில் தொடங்கிய நிலையில், அடைக்கலத்தை தேடி பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டார் தாவூத் இப்ராஹிம் எனக் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை தாவூத் இப்ராஹிம் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. பாகிஸ்தான் அரசு, தாவூத் எங்க கிட்ட இல்லைங்கோ என வழக்கம் போல வேடிக்கை காட்டி வருகிறது.

நடிகையுடன் தொடர்பு
இந்நிலையில், தற்போது தாவூத் இப்ராஹிமுக்கும் பாகிஸ்தான் நடிகை மெஹ்விஷ் ஹயத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் இந்திய மீடியாக்கள் ஆதாரங்களுடன் கிழித்து எடுத்தன. அந்த செய்தி உலகம் முழுவதும் தீயாய் பரவிய நிலையில், மெஹ்விஷ் ஹயத்தின் காதுகளுக்கும் அது எட்டியது.

குப்பை ஜர்னலிசம்
ஆதாரப்பூர்வமற்ற தகவலை திட்டமிட்டே இந்திய மீடியாக்கள் ஏன் பரப்புகின்றன என்பது எனக்குத் தெரியும், அவர்கள் செய்வது ஒரு குப்பை ஜர்னலிசம். இதுக்கெல்லாம் நான் அசரமாட்டேன் என தன் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து, இந்திய மீடியாக்களையும் சீண்டி விட்டுள்ளார் அந்த பாகிஸ்தான் நடிகை.

டிகாப்ரியோவுடன்
காஷ்மீர் பிரச்சனையை தான் எழுப்பி வருவதால் தான் தன்னை வேண்டுமென்றே முடக்க நினைக்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் செய்யும் அட்டகாசங்களையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். வேண்டுமென்றால், அடுத்த முறை என்னை ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ உடன் தொடர்பு படுத்துங்களேன் என நக்கலாக ட்வீட் போட்டுள்ளார்.

ஓவர் நைட் புகழ்
சினிமாவில் ஐட்டம் நம்பராக அறிமுகமாகி சில படங்களிலேயே நடித்துள்ள மெஹ்விஷ் ஹயத்துக்கு, பாகிஸ்தானின் உயரிய விருதான 'Tamga-e-Imtiaz' விருது எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வியை முதலில் கேட்டதே பாகிஸ்தான் மீடியாக்களும் பாகிஸ்தானில் உள்ள பிரபல நடிகர்களும் தான். தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இல்லாமலா ஓவர் நைட்டில் இவருக்கு புகழ் வந்தது என உலகம் முழுவதும் பேச்சுக்களும் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.