ஐஸ்வர்யா ராஜேஸின் மெடிக்கல் க்ரைம் திரில்லர் மெய்... அறிமுக ஹீரோ நிக்கி சுந்தரம்
சென்னை: மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகளை மையப்படுத்தி மெடிக்கல் கிரைம் திரில்லராக எடுக்கப்பட்ட படம் மெய். இதில் நிக்கி சுந்தரம் என்கிற புதுமுக ஹீரோவும் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கின்றனர்.
முன்னணி தொழில் அதிபர்கள் சினிமா துறையில் வந்து சாதிப்பது புது ட்ரெண்டாக மாறி வருகிறது. டிவிஎஸ் குடும்பத்தின் கொள்ளுபேரன் நிக்கி சுந்தரம். இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள நடிப்பு கல்லூரியில் படித்து வருகிறார். தனது நடிப்பு திறனை பரிசோதிக்க அவரே தயாரித்து நடிக்கும் படம் தான் மெய். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், சார்லி, அஜய் கோஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை பற்றி பேசிய நிக்கி சுந்தரம், எனது அம்மா டிவிஎஸ் குடும்பத்தை சேர்ந்தவர். நாங்கள் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டோம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்து எல்லாமே அமெரிக்காவில் தான். வீட்டில் தமிழ் பேசுவதால் எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். சின்ன வயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வம். அதனால் அது தொடர்பான அனைத்து விஷயங்களும் கற்றுக் கொண்டேன். நிறைய தமிழ் படங்களும் பார்ப்பேன். அதனால் தமிழில் நடிக்கும் ஆர்வம் வந்தது.

இந்தப்படம் ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர் படம். நான் டாக்டராகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப்பாகவும் நடிக்கிறோம். தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.
எஸ்.ஏ.பாஸ்கரன் மெய் படத்தை இயக்குகிறார். இவர் சித்திக், ஜீத்து ஜோசப் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் மருத்துவத் துறையில் காணப்படும் ஊழல்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
இப்படத்திற்கு வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அணில் பிரித்வி குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் மெய் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்துகிறது படத்தின் ட்ரெயிலர். ஆகஸ்ட் 23ஆம் தேதி மெய் படம் ரிலீஸ் ஆகிறது. நிக்கி சுந்தரத்தின் இந்த புது முயற்சி வெற்றி பெற பில்மிபீட் இன் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











