twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவதுறையில் இத்தனை ஊழலா - மெடிக்கல் மாபியாவை தோலுரிக்கும் மெய்

    |

    சென்னை: இன்றைய நவீன காலத்தில் மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளை சொல்லும் படமே மெய் என்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கூறினார்.

    டிவிஎஸ் குடும்பத்தின் கொள்ளுபேரன் நிக்கி சுந்தரம். இவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள நடிப்பு கல்லூரியில் படித்து வருகிறார். தனது நடிப்பு திறனை பரிசோதிக்க அவரே தயாரித்து நடிக்கும் படம் தான் மெய். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், சார்லி, அஜய் கோஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    மெய் படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தைப் பற்றி நடிகர்களும், இயக்குநர், கதாசிரியர் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள்

    விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள்

    காலம் காலமாக மருத்துவத் துறையில் நடந்து வரும் முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவருகின்றன. அப்படி இருந்தும் கூட அப்பாவி பொதுமக்கள் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். மிக சொற்ப பணத்திற்கு விலை மதிப்பில்லாத தங்கள் உடல் உறுப்புகளை இழந்து வருகின்றனர்.

    புலன் விசாரணை, ரமணா

    புலன் விசாரணை, ரமணா

    கடந்த 1990ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்து ஆர்,கே.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த புலன் விசாரணை படம் அப்போது மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் அன்றைய காலகட்டத்தில் அந்தப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல் கடந்த 2002ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படமும் மருத்துவ மனையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

    காக்கிச் சட்டை

    காக்கிச் சட்டை

    அதேபோல் 2015ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை படமும் மருத்துவத்துறையில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை எடுத்துச்சொல்லும் படமாக இருந்தது. அந்த வகையில் தற்போது வந்திருக்கும் படம் தான் மெய்.

    டிவிஎஸ் சுந்தரம் குழுமம் தயாரிப்பு

    டிவிஎஸ் சுந்தரம் குழுமம் தயாரிப்பு

    மெய் படத்தை தயாரித்திருப்பது, புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் சுந்தரம் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் புரொடக்சன்ஸ் ஆகும். இப்படத்தின் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் நடிக்கிறார். இவரும் சுந்தரம் குழுமத்தைச் சேர்ந்தவர் தான். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சார்லி, கிஷோர், அஜய்கோஷ், ராம்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குவது எஸ்.ஏ.பாஸ்கரன்.

    வெகுநாள் கனவு

    வெகுநாள் கனவு

    மெய் படத்தின் வெளியீடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ப்ரீத்தி கிருஷ்ணா, படம் தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் வெகுநாள் கனவு கூட. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். நாங்கள் நினைத்தது போலவே மெய் படத்தின் கதை அமைந்தது. இன்றைய சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் நல்ல கருத்துக்களும் இந்த கதையில் உள்ளன. ஆகவே இந்தப் படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப்படம் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று கூறினார்.

    தமிழ் படங்கள் மீது ஆர்வம்

    தமிழ் படங்கள் மீது ஆர்வம்

    மெய் படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம் பேசியபோது, நான் அமெரிக்காவில் படித்திருந்தாலும் தமிழ் படங்கள் மீது ஆர்வம் இருந்தது. விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களை பார்த்து வளர்ந்தேன். தமிழ் படங்களின் மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்துள்ளேன் . மெய் படத்தில் சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் உள்ளன. அதனால் தான் நானே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

    சாதாரண காய்ச்சலுக்கு ரூ.1 லட்சம் பில்

    சாதாரண காய்ச்சலுக்கு ரூ.1 லட்சம் பில்

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் பேசும்பொழுது, நான் சமீபத்தில் சாதாரண காய்ச்சல் என்று சொல்லி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு ரூ.1 லட்சத்திற்கு பில் போட்டு கட்டணம் வசூலித்துவிட்டு, சாதாரண காய்ச்சலுக்கு தரும் மாத்திரையே கொடுத்தனர். அதே சமயத்தில் தரமான மருத்துவமனைகளும் இங்கு உள்ளன.

    மெய் என் மனநிலையை வெளிப்படுத்தும்

    மெய் என் மனநிலையை வெளிப்படுத்தும்

    தற்போது மெய் படமும் என் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகன் நிக்கி சுந்தரம் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அடிபட்டாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார் என்று கூறினார்.

    உலகமே பாராட்டும் படம்

    உலகமே பாராட்டும் படம்

    நடிகர் சார்லி பேசும்போது, மெய் படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் நிறைய பிடித்த அம்சங்கள் உள்ளன. கதாநாயகனாக அறிமுகமான நிக்கி சுந்தரம் திறமையானவர். அவரிடம் கடின உழைப்பும், சினிமாவை நேசிக்கும் தன்மையும் அவரிடம் உள்ளது. நிக்கி சிறந்த நடிகராக வருவார். இந்தப் படம் உலகமே பாராட்டும் படமாக அமையும். திறமையான இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார் என்று கூறினார்.

    பொருத்தமான தலைப்பு

    பொருத்தமான தலைப்பு

    இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் பேசும்பொழுது, நான் இயக்குநர் சித்திக்கிடம் அதிக படங்களில் பணியாற்றி உள்ளேன். சுரேஷ் பாலாஜி தான் மெய் படத்தின் கதையைக் கேட்டு நிச்சயம் படமாக எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் ப்ரீத்தி கிருஷ்ணாவை அறிமுகம் செய்தார். அவர்தான் இந்தப் படத்திற்கு மெய் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். மெய் படம் மருத்துவத்தைப் பற்றிய உண்மைச் சம்பவம். மருத்துவமனையில் நடக்கும் ஒரு மாஃபியாவைப் பற்றிய கதை. மருத்துவ திகில் படமாக உருவாகி உள்ளது. அதேபோல் கமர்ஷியல் அம்சங்களும் உள்ளன என்று கூறினார்.

    முடிவல்ல ஆரம்பம்

    முடிவல்ல ஆரம்பம்

    மெய் படத்தின் கதாசிரியர் செந்தா முருகேசன் பேசும்பொழுது, நாம் இப்பொழுது சாப்பிடும் மருந்து, அந்த நோய்க்கான தீர்வு கிடையாது, அடுத்து வரப்போகும் புது நோய்க்கான ஆரம்பம். அதைத்தான் மெய் படத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறோம் என்றார்.

    English summary
    Actress Aishwarya Rajash said at the press conference of the MEI film that, the film is really about the abuses of the medical field in modern times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X